சித்திரா பௌர்ணமி – 16 ஏப்ரல் 2022
சித்ரா பௌர்ணமி என்பது புராணங்களில் சித்ரகுப்தன் பிறந்தநாள் ஆகும். நம்முடைய பாவ புண்ணிய கணக்குகளை ஒன்றுவிடாமல் எழுதிவைத்து, நம்முடைய உயிர் பிரிந்ததும், நம் நரகத்திற்கு செல்ல போகின்றோமா அல்லது சொர்க்கத்திற்கு செல்ல போகின்றோமா என்பதை நிர்ணயிப்பது இந்த சித்திர குப்தனின் கையில் இருக்கும் கணக்கு புத்தகத்தில் தான் உள்ளது.
சித்திரா பௌர்ணமி புராண கதை:
தமிழ் வருடத்தின் முதல் மாதமான, சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி தினத்தையே சித்திரா பௌர்ணமி திருநாளாக எல்லோரும் கொண்டாடி வருகின்றனர். இந்த தினத்தில் குறிப்பாக, சித்திரகுப்தரை வழிபட வேண்டும் என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. இன்றைய தினம் தான் சித்திர குப்தனின் பிறந்தநாள் என்றும் சில சாஸ்திர குறிப்புகள் கூறுகிறது.
ஓர் அழகான ஓவியத்தை ரசித்து மகிழ்ந்த பார்வதிதேவி சிவபெருமானிடம் இந்த ஓவியத்தை உயிர்ப்பித்துதாருங்கள் என வேண்டினார். சிவனும் தன் மூச்சுக்காற்றால் உயிர்ப்பித்துக் கொடுத்தார். சித்திரம் மூலம் சித்ராபௌர்ணமியன்று பிறந்ததால் அவர் சித்திரகுப்தன் என்றழைக்கப்பட்டார். அவரே எமதர்மராஜரிடம், பாவபுண்ணியக்கணக்கு எழுதும் எழுத்தராக பணியாற்றுபவர் என்கிறது புராணம்.
சித்ரா பௌர்ணமி சிறப்பு:
இந்திரன் பாபவிமோசனம் வேண்டி அனைத்து சிவஸ்தலங்களையும் சென்று வணங்கி வரும் நிலையில், மதுரை சொக்கநாரைத் தரிசித்து பாவ விமோசனம் பெற்ற புண்ணிய நாள் சித்ராபௌர்ணமி அன்று தான் எனவும், சீதாராமர் வனவாசம் முடிந்து நகருக்கு திரும்பிய நாள் சித்ரா பௌர்ணமி நாள் எனவும். மதுரை வைகைக்கரையில் கள்ளழகர் எழுந்தருளிய நாள் சித்ராபௌர்ணமி எனவும் புராணங்கள் கூறுகின்றன.
செவ்வாய் தோஷம் நீங்கும்:
நவக்கிரக கேதுவின் தேவதை சித்திரகுப்தர். எனவே கேதுவின் தோஷங்கள், தடைகள் குழப்பங்கள் தீரும். கடன் பிரச்சினைகள், சத்ரு துன்பங்கள் நீங்கி சுலபமாகும். நவக்கிரகதோஷங்கள்,பாவ விமோசனம் நீங்குகிறது. புத்திரபாக்கியம் ஏற்படுகிறது. திருமணத்தடைகள் நீங்கி திருமணம் நடப்பது, தொழில் தடைகள் நீங்கி தொழில் மேன்மை கிடைக்கிறது. செவ்வாயின் நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிப்பதால் செவ்வாய் தோஷம் நீக்குகிறது. சந்திரனின் கரகத்துவமான தனம், உடல், மனம் மேன்மையடைகிறது. அன்னைதினம் தாய்க்கிரகம் சந்திரன் அதிபலம் பெறும் இந்த நாள் பெண்கள் தாயையும் தாய் வம்சத்திற்கு செய்ய வேண்டிய ஆகம கடமைகளையும் செய்ய வேண்டிய நாள். மாங்கல்ய பலம் பெறும் நாள்.
தோஷம் போக்கும் சித்ரகுப்தன்:
நவக்கிரகங்களில் ஒன்றான கேதுவுக்குரிய பிரத்யேக தேவதையாக சித்ரகுப்தனைக் கூறுவர். ஞானக்காரகனான கேது, புர்வ பண்ணியத்தை நிர்ணயித்து கொடுப்பவர். ஒருவர் ஜாதகத்தில் கேது சரியில்லை என்றால் பல பிரச்சனைகளும் உடல் உபாதைகளும் அனுபவிக்க நேரிடும். அதனால்தான் ஜோதிட சாஸ்திரம், “ராகுவை போல் கொடுப்பார் இல்லை, கேதுவை போல் கெடுப்பார்” இல்லை என்கிறது. இப்பேர்பட்ட கேது பகவானின் தொல்லையில் இருந்து விடுபட வருடத்திற்கு ஒருமுறையாவது சித்திரகுப்தனை வணங்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். ஸ்ரீவாஞ்சியம், ஸ்ரீ வாஞ்சிநாதர் திருக்கோயில் யமதர்மராஜனுக்கும் சித்திரகுப்தருக்கும் தனி சன்னதி உண்டு. காஞ்சிபுரத்தில் சித்திரகுப்தருக்கு கோவில் உள்ளது. இங்கு இவரை தரிசனம் செய்வதால் வாழ்வில் நல்ல பலன் கிடைக்கும்.
அபிஷேகம், அலங்காரங்கள், ஆராதனைகள் செய்யத் தேவையான அனைத்தும் www.rssonline.in இல் கிடைக்கும். (Now, Abisheka, Alankara & Aaradhanai items are available at www.rssonline.in
All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.