Karadaiyan Nonbu

By | March 14, 2016

1 Karadayan Nonbu

 

காரடையான் நோன்பு  (காரடை உண்டு நோன்பு முடிப்பது)

இந்த நாளில் இறப்பான் எனத் தெரிந்தும் தன் மாங்கல்ய பலத்தின் மீது நம்பிக்கை வைத்து சத்தியவானை மணந்த சாவித்திரி, குறிப்பிட்ட அந்நாளில் அன்ன ஆகாரமின்றி அரை நொடியும் கணவனைப் பிரியாது நோன்பிருந்தால். அவளது பத்தினித் தன்மையினால், சத்தியவானின் உயிர் கவர்ந்த எமனைத் தொடர்ந்து அவருடன் வாதிட்டு, போராடி தன் கணவரின் உயிரைத் திருப்பித் தருமாறு பல வகையிலும் வேண்டினாள். அதனைத் தவிர வேறு எதைக் கேட்டாலும் தருகிறேன் என்று வாக்களித்த எமனிடம் நான் தாயாக வேண்டும் என்று வரம் கேட்டாள். தந்தோம் என்று எமனுரைத்த அந்த நொடியில் பத்தினிப் பெண்ணான நான் கணவரின் உயிரை உம்மிடம் விட்டு எவ்வாறு தாயாவேன் என்று எமனிடமிருந்து சத்தியவானை உயிருடன் மீட்டு வந்தாள்.

இது நிகழ்ந்த மாசியும் பங்குனியும் சேருகின்ற அந்த முகூர்த்த வேலையில் (சூரியன்கும்பத்திலிருந்து மீனத்திற்கு செல்லும் நேரம்), நோன்பு கடைப்பிடித்து “உருக்காத வெண்ணையும் ஒரு காரும் நான் உண்ண ஒருக்காலும் (காலமும்) என் கணவன் என்னை விட்டு பிரியாதிருக்கவேண்டும்” என்று வேண்டி காரடையும் வெண்ணையும் உண்டு மஞ்சள் சரடு கட்டி வணங்கி வருவது காரடையான் நோன்பு ஆகும்.

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

 

Kaaradaiyan Nonbu (Break the Fast with Karadai)

Knowingly that the man will die on so and so date, having confidence on the power of Mangalyam, Savithri married Sathyavan and that particular day, she did  fasting without eating anything and stayed with him throughout the day. Because of her virtue, she followed Eman who took Sathyavan’s life, argued, fought and pleded with him to give back her husband alive.  Eman promised to give her any other thing she wants except Sathyavan’s  life. She asked Eman that she has to become a Mother.  He gave the boon to her to become a Mother.  Then, she asked, “How, a wife can become Mother without Husband alive and she got Sathyavan back alive.

This happened during the cusp of (the meeting of) Maasi & Panguni (Sun moving from Kumbam to Meenam) and during that Muhurtha time, everybody Fast and say “Urukkatha Vennaiyum oru karum Naan unna oru kalum en kanavan enaaivittu piriyathu irukkanum” and tie the sacred yellow thread called Saradu and worship.  This is called Karadaiyan Nonbu.

 

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *