All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.
சாளக்கிராமம் என்பது என்ன?
சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும் ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல் ஆகும். இவை நத்தைக்கூடு, சங்கு முதலாய பல வடிவங்களில் பல வண்ணங்களில் கிடைக்கிறது. திருமால் தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்னும் பூச்சியின் வடிவெடுத்து, சாளக்கிராமத்தை குடைந்து, அதன் கர்ப்பத்தை அடைவார். அங்கு ரீங்கான வடிவில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பல விதமான சுருள் ரேகையுடன் கூடிய பல சக்கரங்களை வரைந்து பல்வேறு அவதாரங்களை விளையாட்டாக வரைந்து பின் மறைந்து விடுவதாக கூறுவர். இப்படிப்பட்ட வடிவங்கள்தான் வணங்கிட உகந்தவையாகும்.
சிறப்பு:
சாளக்கிராமத்தில் தெய்வீக அருள் இருப்பது மட்டுமில்லாமல் இவற்றில் 14 உலோக சக்திகள் இருப்பதாக கூறப்படுகிறது. வழிபடப்பெற்ற சாளக்கிராமங்களை சரித்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்து பெற வேண்டும் என்பது நியதி. சாளக்கிராமத்தின் தனித்தன்மையை அறிந்தவர்களிடம் அதன் வண்ணம், அதில் அமைந்துள்ள ரேகைகள் ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களுடைய அறிவுரையின் பேரில் வாங்குவது சிறப்பு. சேவை தரும் எம்பெருமான் ஸ்ரீமூர்த்தி, கேசவன், நாராயணன், மாதவன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்கிரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் ஆகிய பன்னிரண்டு கூறுகளாகக் கற்கள் வடிவத்தில் விளங்கி, செல்வத்தை வழங்கும் அதிபதியாகக் குபேரன் திசை நோக்கி எழுந்தருளியுள்ளார்.
சாளக்கிராமத் தலம் தானாக சுயம்புவாகத் தோன்றிய காரணத்தால் ஸ்வயம் வியக்தம் என்னும் சிறப்பினைக் கொண்டு விளங்குகிறது. இங்கு எப்பொழுதும் எம்பெருமான் நிரந்தரமான நிலையில் நித்ய சாந்நித்யமாக எழுந்தருளியிருக்கிறார் என்பர் வைணவப் பெரியோர்கள். சாளக்கிராமம் புனிதம் வாய்ந்த கண்டகி நதியில் விளைவதால் தோஷம் இல்லாதது. யாரும் தொட்டு வழிபடலாம். சாளக்கிராம வடிவங்கள் பல வகைப்படும். ஒரு துளையில் நான்கு சக்கரங்களைக் கொண்டு வனமாலையை அணிந்த வடிவமுடையது லட்சுமி நாராயண சாளக்கிராமம். நான்கு சக்கரங்களுடன் வனமாலை இல்லாமல் இருப்பது லட்சுமி ஜனார்த்தன சாளக்கிறாமம், இரண்டு துளைகளுக்குள் நான்கு சக்கரங்களையும் கொண்டு ரதாகாரமாக இருப்பது ரகுநாத சாளக்கிராமம். இரண்டு சக்கரங்கள் மாத்திரம் கொண்டிருப்பது வாமன சாளக்கிராமம்.
All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.
What is Salagramam?
Salagramam is a spiritualistic beautiful stone that is formed in Kandagi River. These are available in the shapes of the Snail’s Shells, Sangu and in different colours. It is said that Lord Vishnu enters the Stones taking the form of a Glowing golden worm called VajraGreedam and draw circular lines showing different Avatars of Lord. Hence, these become spiritualistic and worshipable.
Speciality:
Not only the spirituality but also Salagramam contains the power of 14 metal Alloys. It is advisable to get the Worshipped Saligramams from scholors who are aware of the Colours and the significance of the lines on the Salagramam. Lord Vishnu resides in the stone blessing us the eternal wealth facing the direction of the Kubera, the lord of Wealth in 12 forms as Shri Moorthy, Kesavan, Narayanan, Maadhavan, Vishnu, Madhusoothanan, Thrivikraman, Vamanan, Sridharan, Rishikeshan, Padmanabhan and Damodharan
As this place is formed on its own, it is specially known as swayam vyaktham. It is considered in Vaishnavism that Lord Vishnu stays here permanently. As it is formed on the Kandagi river, it has no Dosham (Curse).
On one hole with four Chakras with Vanamalai shaped is Lakshmi Narayana Salagramam. The one with four Chakras without Vanamalai is Lakshmi Janarthana Salagramam. On two holes with four Chakras is Raghunatha Salagramam. The one with only two holes is Vamana Salagramam.
All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.