SANGU – CONCH – NATURAL SHELL – SHANKH

By | June 20, 2016

sangu2

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

கோவில்களிலும், வீடுகளிலும் பூஜை செய்யும் போது சங்கை ஊதுவது பலகாலமாக நம் நாட்டில் இருந்து வருகிறது. பூஜையின் போது மட்டுமல்லாமல் மங்கல நிகழ்ச்சிகளின் போதும், போர் துவங்குவதைக் குறிக்கவோ, போரில் ஒரு படை வெற்றி அடைந்ததை அறிவிக்கவோ சங்கு ஊதப்படுகிறது. மஹாபாரதப் போரின்போது காலையில் போர் ஆரம்பிக்கும் போதும் மாலை சூரியாஸ்தமனம் ஆனவுடன் போரை முடிக்கும் போதும் சங்கு ஊதியதாக நாம் படிக்கிறோம். பஞ்சபண்டவர்களும், கிருஷ்ண பரமாத்மாவும் வைத்திருந்த சங்குகளுக்குத் தனித்தனி பெயர்கள் இருந்தன. தருமரிடம் இருந்த சங்கின் பெயர் அனந்த விஜயம். பீமனது சங்கின் பெயர் பவுண்டிரம். அர்ச்சுனனிடம் இருந்த சங்கு தேவதத்தம். நகுலனது சங்கின் பெயர் சுகோஷம். சகாதேவனது சங்கு மணிப்புஷ்பகம். ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்தது பாஞ்சஜன்யம் என்ற பிரபல சங்கு.

சங்கு தோன்றியதைப் பற்றி புராணங்களில் ஒரு கதை சொல்லப்படுகிறது. சங்காசுரன் என்னும் அசுரன் தேவர்களைப் போரில் மூழ்கடித்து அவர்களிடம் இருந்து வேதங்களைத் திருடிக் கொண்டு கடலுக்கு அடியில் பதுங்கிக் கொண்டான். தேவர்கள் மகா விஷ்ணுவிடம் போய் முறையிட அவர் மத்ஸ்ய (மீன்) அவதாரம் எடுத்து சங்காசுரனைக் கொன்றார். அப்போது சங்காசுரனின் தலை மற்றும் காதில் இருந்து சங்கைப் போன்ற தோற்றம் உள்ள எலும்பினை எடுத்து ஊத அதில் இருந்து ’ஓம்’ என்ற ஓசை எழுந்தது என்றும் அந்த ஓசையில் இருந்து வேதங்கள் வெளிப்பட்டன என்றும் சொல்லப்படுகிறது.
சங்காசுரனிடமிருந்து தோன்றியதால் தான் அதற்கு சங்கு என்ற பெயர் ஏற்பட்டது. மகாவிஷ்ணு தன் நான்கு கைகளில் ஒன்றில் பாஞ்சஜன்யம் என்ற அந்த சங்கை எப்போதும் ஏந்திக் கொண்டிருப்பார். தர்மம் என்கிற உயர் அம்சத்தை
சங்கு குறிப்பதாகவும் எனவே தர்மத்தை நிலை நாட்டும் இறைவன் சங்கைத் தன் கையில் எப்போதும் ஏந்திக் கொண்டிருக்கிறார் என்றும் பெரியோர் கூறுகிறார்கள். சங்கையும், சக்கரத்தையும் ஏந்திக் கொண்டிருப்பதால் அவருக்கு ‘சங்கு சக்ரதாரி’ என்ற பெயர் உண்டு.
இவ்வாறு சங்கு உருவானதால் சங்கொலி அதர்மத்தின் அழிவையும், தர்மத்தின் வெற்றியையும் காட்டுகிறது. சங்கு பிறந்த கதைக்கேற்ப சங்கை நம் காதருகில் வைத்துக் கேட்டால் கடல் அலைகளின் ஓசையை நம்மால் கேட்க முடியும். வேதங்களின் பொருளான ஓம்கார மந்திரத்தைத் தருவதாலும், தர்மத்தை நிலைநாட்டும் பொருளைத் தருவதாலும் பூஜையறையில் இறைவன் முன்பு வைத்து வணங்கப்படும் அளவு சங்கிற்கு சிறப்பு உண்டு.
மங்கலகரமான பூஜை நேரங்களில் அமங்கலமான வார்த்தைகளோ, பேச்சுக்களோ பக்தர்களின் காதில் விழுந்து பக்தி மனோபாவத்தைக் குறைத்து விடாதிருக்கவும் சங்கு ஊதுவது உதவுகிறது.
மேலும் சங்கு ஊதுவது ஆன்மிக ரீதியாக அல்லாமல், ஆரோக்கிய ரீதியாகவும் உதவுகிறது. சங்கு ஊதும் போது நாதமானது மூலாதாரத்தில் இருந்து எழுகிறது. அதனால் சங்கு ஊதுவதன் மூலம் மூலாதார சக்ரம் நன்றாக செயலாக்கம் பெறுகிறது. மேலும் சங்கு ஊதுவதினால் மூச்சு ஆழப்பட்டு, நுரையீரல் செயல்படுவதும் சீராகிறது. சங்கிற்கு உடலைப் பாதிக்கும் நுண்கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளது என்று நம் முன்னோர் நம்பினார்கள். அதனால் தான் தீர்த்தம் சங்கில் தரப்படுவது விசேஷமாகக் கருதப்பட்டது. குழந்தைகளுக்கும் அக்காலத்தில் மருந்தையும், பாலையும் சங்கில் ஊற்றித் தரும் வழக்கம் நம் வீடுகளில் இருந்தது.

 

 

sangu1

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

Blowing Conch (Sangu) during pooja is there in our customs for quite long time.  Apart from pooja time, for all Auspecious happenings, War time & for announcing victory on the war, blowing Conch (Sangu) was used.  It is evidenced from Mahabharatha, which says every day during morning, before starting the war and in the evening for end of war, Conch (Sangu) were blown.  Pandava’s had separate Conch (Sangu) which was called as, Dharuman – AnanthaVijayam; Bhiman – Poundiram; Arjunan – Deva Dhattam, Nagulan – Sugosham, Sagadevan – Mani Pushpagam and Lord Krishna had PaanchaJanyam.

 

The origin of Conch (Sangu) is told in Puranas.  It is said that, once the Sangasura was very powerful, and he defeated Deva’s and stolen the Vedas from them and hide himself underneath the sea.  Deva’s seeked the help of Lorder MahaVishnu who took the Avatar of Fish (Matsya) and killed the Sangasura.  The bones from the head and ear which was Conch (Sangu) shaped was blown and the sound “OUM” emerged out of it and all Veda’s came out from that Sound.  Since, it started from Sangasuran, it was named as Sangu (Conch).  Lord Vishnu hold the conch (Sangu) PaanchJanyam, ever in his hands.  Scholors says that Conch (Sangu) represents Dharma and as a protector of Dharma, Lord Vishnu holds the Conch (Sangu) for ever in his hands.  As he holds Sangu(Conch) & Chakram in his hands, He is called “Sangu Chakra Dhaari”(The one who wears Sangu & Chakram).

 

Thus Sangu(Conch) emerged as an end to Adharma and the symbol of Dharma.  If the Conch (Sangu) is kept near our ears, we can hear the sound of Ocean from that, as per the story of its origin.  As it gives the sound of the meaning of all Vedas, “OUM” and Stands for Dharma it has got such a pride of being kept in Pooja and worshipped. Conch (Sangu) Blowing helps during the Auspecious pooja time, prevent unauspecious sounds distract the spiritual mind.  It is not only spiritually good but also healthy.  When the Conch (Sangu) is blown, the air originates from the Mooladharam increasing the performance of the Mooladhara Chakram.  Also, it eases breath and enhances the performance of the Lungs.  Our ancestors knew that it functions as antibacterial, and hence they used Sangu Theertham (Water from the Conch) as medicine for a few diseases and also used to feed and medicate the kids with Sangu (Conch).

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

Sangu3

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *