Monthly Archives: September 2016

Arulnirai Kayilaya Nathar Udanurai UmaMaheshwari Temple, Erthangal, Gudiyatham – அருள்நிறை கயிலாய நாதர் உடனுறை உமாமகேஸ்வரி திருக்கோவில், எர்த்தாங்கள், குடியாத்தம்.

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in

அருள்நிறை கயிலாய நாதர் உடனுறை உமாமகேஸ்வரி திருக்கோவில், எர்த்தாங்கள், குடியாத்தம்.

அருள்நிறை கயிலாய நாதர் உடனுறை உமாமகேஸ்வரி திருக்கோவில்,
எர்த்தாங்கள், குடியாத்தம்.

அருள்நிறை கயிலாய நாதர் உடனுறை உமாமகேஸ்வரி திருக்கோவில்,

எர்த்தாங்கள், குடியாத்தம்.

 

850 ஆண்டுகள் பழமையான மிகவும் சிதிலமடைந்த ஆலயம் அப்பகுதியை சேர்ந்த சிலரின் கடும் முயற்சியால் தற்போது புதுபொலிவு பெற்றுக் கொண்டிருக்கிறது.  இரு கருவறைகளுடன் மதில்களும் கட்டப்பட்டு கார்த்திகை 24  டிசம்பர் 9, 2016 இல் கும்பாபிஷேகம் காண இருக்கும் இவ்வாலயத்தில் கயிலாய நாதர் தனி கருவறையிலும் உமாமகேஸ்வரி தனி கருவறையிலும் அருள்கின்றனர்.  மேலும் இங்கு நடராஜர், தஷிணாமூர்த்தி, விநாயகர், நால்வர் ஆகிய அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்’ ஆகியோர் அருள்கின்றனர்.

850 ஆண்டுகள் முன்னர் பேரண்டன் என்னும் அரக்கன் இவ்வூரை அழிக்க எண்ணி, அவ்வூரின் ஏரி, நிறைந்து உடையும் வண்ணம் செய்கிறான்.  இவ்வூரை காக்க வேண்டி மக்கள் ஈசனை வேண்ட கயிலாய நாதர் உமை அம்மையுடன் இங்கு வந்து ஏரி உடையாமல் காத்ததால் இவ்வூர் ஏரித்தாங்கள் என்றாகி பின்னாளில் மருவி எர்த்தாங்கள் என்றாயிற்று.

இங்குள்ள மூலவருக்கு பாலாபிஷேகம் செய்த போது அது’ நீல வண்ணமாக காட்சி அளித்ததால் இத்தலம், நாகதோஷம், ராகு தோஷம் ஆகியவற்றுக்கு பரிகாரத்தலமாக விளங்குகிறது.  இவ்வாலயத்தில் உள்ள அனைத்து உற்சவ மூர்த்திகளும் ராஜா ஆன்மீக சூப்பர் மார்க்கெட்டிலிருந்து வாங்கப்பட்டன

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in

 

அருள்நிறை கயிலாய நாதர் உடனுறை உமாமகேஸ்வரி திருக்கோவில், எர்த்தாங்கள், குடியாத்தம்.

அருள்நிறை கயிலாய நாதர் உடனுறை உமாமகேஸ்வரி திருக்கோவில், எர்த்தாங்கள், குடியாத்தம்.

 

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in

Arulnirai Kayilaya Nathar Udanurai UmaMaheshwari Temple, Erthangal, Gudiyatham

850 Years old Ruined temple is being renovated with the efforts of some people of that area.  With two Sanctums and the compound wall the temple that’s going to see  its Kumbabhisekam on December 9th 2016, Karthikar 24th, Kayilayanathar and Umamaheswari adorns the two sanctums.  Also, Natarajar, Dhakshinamoorthy, Vinayagar, Nalvar (Main 4 among the 63 Nayanmars) namely Appar, Sundarar, Sambhandhar & Manickavasagar also blesses us here.

850 Years before  a deman by name Perandan makes the lake filled and broke in a way that the whole village is demolished.  The people worshipped the Lord and Kayilayanathar with Umamaheshwari came here and protected the village without breaking the lake.  Hence the place is called Erithangal (Lake Protected) and latter became Erthangal.

Once, when Palabisekham was performed on the Main Deity, it became Blue and hence is treated as Parikara Sthalam for Raghu Dhosam and Naga Dhosam. All Urchava Moorthis in this temple are bought from Raja Spiritual Super Market (P) Ltd.

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in

img_9922

Ulagalandha Perumal Temple – Kanchipuram – உலகளந்த பெருமாள் கோவில் காஞ்சிபுரம்

Ulagalandha Perumal Temple - Kanchipuram - உலகளந்த பெருமாள் கோவில் காஞ்சிபுரம்

Ulagalandha Perumal Temple – Kanchipuram – உலகளந்த பெருமாள் கோவில் காஞ்சிபுரம்

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in

ஒரு கோவிலுக்குள் நான்கு திவ்ய தேசங்கள், கோவில் நகரமாம் காஞ்சியில். இத்தகைய சிறப்பு வாய்ந்தது உலகளந்த பெருமாள் கோவில். மூன்றடியில் உலகளந்தவனின் கோவில் ஆறடி நிலத்திலிருந்து இறங்கி இருக்கிறது.

உலகளந்த பெருமாள் கோவில் என்றாலும் உலகளந்த பெருமாள் திவ்ய தேச பெருமாள் அல்ல. இவ்வாலயத்தில் உள்ள திரு ஊரகத்தான், திரு நீரகத்தான், திரு காரகத்தான், திரு கார்வண்ணன் ஆகிய நால்வருமே திவ்ய தேச பெருமாள் ஆவர்.  இவர்களை திருமழிசை ஆழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

இவ்வாலயத்தின் விமானம் சார ஸ்ரீகர விமானம் ஆகும். சேஷ தீர்த்தம்(நாக தீர்த்தம்) எனும் குளம் கோவிலின் வெளிப்புறத்தில் அமைந்துள்ளது. அமிர்தவல்லி தாயார் தனி சன்னிதியில் அருள்கின்றார்.

நாக தோஷம், கால சர்ப்ப தோஷம்,ராகு தோஷம் போன்ற தோஷங்களுக்கு நிவர்த்தி ஸ்தலமாக விளங்குகிறது இவ்வாலயம்.

 

Ulagalandha Perumal Temple - Kanchipuram - உலகளந்த பெருமாள் கோவில் காஞ்சிபுரம்

Ulagalandha Perumal Temple – Kanchipuram – உலகளந்த பெருமாள் கோவில் காஞ்சிபுரம்

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in

Four Dhivya Desa’s in one temple at Kanchipuram. Ulagalndha Perumal temple is that Special temple.  The one who measured the whole world in Three Feet’s temple is down from the land level by 6 Feet.

Though the temple is Ulagalndha Perumal temple, Ulagalndha Perumal is not the Dhivya desa Deity. Thiru Ooragaththan, Thiru Neeragaththan, Thirukkaragaththan, Thirukkarvannan are the four  Dhivya desa Deities who are sung by Thirumazhisai Azhwar & Thirumangai Azhwar.

The temple has Sara Srikara Vimanam.  Sesha Theertham (Naga Theertham) lies outside the temple. Amirthavalli Thayar blesses us in a separate Sannidhi.

This temple serves as Dhosa Nivarthi sthalam for Naga Dhosam, Kalasarpa Dhosam, Ragu Dhosam, etc.

 

Ulagalandha Perumal Temple - Kanchipuram - உலகளந்த பெருமாள் கோவில் காஞ்சிபுரம்

Ulagalandha Perumal Temple – Kanchipuram – உலகளந்த பெருமாள் கோவில் காஞ்சிபுரம்

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in

Mannargudi – Sri Rajagopalaswamy temple

Mannargudi – Sri Rajagopalaswamy temple

Mannargudi – Sri Rajagopalaswamy temple

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in

Mannargudi – Sri Rajagopalaswamy temple

 

Mannargudi – Sri Rajagopalaswamy Mannargudi situated at a distance of 56 Kms from Nagappattinam is famous for its Vaishnava temple Rajagopalaswamy temple.

After the period of Rajathi Raja Cholan, this temple was renovated by his successor, Kulothunga Cholan during the period of 1074-1125 A.D. and because of this, later this sthalam is called with the other name “Kulothunga Chola Vinnagaram”.

After the Chola empire, the Nayakar kings of Thanjavur, renovated the temple in a grand way.

After a long break, the Samprokshanam was performed.

General Information of Mannargudi:

All the temples that are found in Tanjore district are said to be greatest and have lots of great Perumals found. One among such temples is Mannargudi – Sri Rajagopalaswamy temple.

A proverb, which explains the greatness of Mannargudi, is

“Kovil Paadhi, Kulam Paadhi”

This proverb explains that half (Paadhi) of this Mannargudi Kshetram is surrounded by temple (Kovil) and rest by Kulam (Pond).

Mannargudi is found on the Southeast part of Tanjore and there are lots of bus facilities are available from Tanjore, Kumbakonam etc. In this Mannargudi, other saivam temples are also found which are also said to be greatest.

In Telugu, “Gudi” means temple. Since, Sri Rajagopalaswamy who is also called with the name “Rajamannar”, this sthalam is popularly called as “Rajamannar Gudi”.

Mannargudi sthalam is also called with other names like, Mannarkoyil, Rajamannargudi, Shanbakaranja vandwarapathy, Dhakshina Dwaraka and Vasudevapuri.

The speciality of this sthalam is that it is said that if we stay for a night in this sthalam, we will get the credit. Which is equivalent to donating 1000 cows to someone. This is well explained by Pulasthiyar. He explains the greatness of this sthalam to Bheeshmar as stated in Mahabharatha as:

“Thathroshya Rajaneemaykaam
Kosahasra balam bhavethi”

 

Mannargudi – Sri Rajagopalaswamy temple

Mannargudi – Sri Rajagopalaswamy temple

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in

மன்னார்குடியில் ஓரிரவு தங்கி ராஜகோபால சுவாமியை வணங்கினால், ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணிய பலன் கிட்டும் என்பது ஐதீகம்.
தலவரலாறு: கோபிலர், கோபிரளயர் என்ற முனிவர்கள், கண்ணனின் லீலைகளைக் பார்க்கவும், அவரைத் தரிசிக்கவும் துவாரகை புறப்பட்டனர். வழியில் அவர்கள் நாரதரைச் சந்தித்தனர். “அடடா! கிருஷ்ணாவதாரம் முடிந்து திருமால் வைகுண்டம் சென்று விட்டாரே! நீங்கள் தாமதமாக துவாரகை செல்கிறீர்களே!” என்றதும்,’ முனிவர்கள் மிகவும் வருந்தினர். அவர்களை ஆறுதல் சொன்ன நாரதர், “நீங்கள் தெற்கேயுள்ள செண்பகாரண்ய ஷேத்திரம் சென்று (மன்னார்குடி) தவம் புரியுங்கள். உங்களுக்கு கிருஷ்ண தரிசனம் கிடைக்கும்,” என்றார்.
முனிவர்களும் இங்கு வந்து தவத்தை துவக்கினர்.
திருமாலும் கண்ணனாக அவர்கள் முன் காட்சி தந்தார். அவரிடம் முனிவர்கள், “கண்ணா அன்று துவாரகையில் செய்தருளிய லீலைகளை இங்கு நிகழ்த்திக் காட்ட வேண்டும்’, என்றனர். அவர் 32 லீலைகளை நிகழ்த்திக் காட்டினார். அதில் முதல் திருக்கோலமான ஸ்ரீதேவி, பூதேவி சமேத வாசுதேவப் பெருமாள் இந்தக் கோவிலில் மூலவராக அமர்ந்தார். 32வது லீலா வினோதமான ருக்மணி, சத்யபாமா சமேத ராஜகோபாலன் உற்சவராக சேவை சாதித்தார். ராஜாதி ராஜசோழன் கி.பி., 1018- 1054ல் இந்தக் கோவிலைக் கட்டிய போது ராஜாதி ராஜ விண்ணகரம் எனப் பெயர் பெற்றிருந்தது. பின் பலரும் திருப்பணி செய்துள்ளனர்.
நல்ல குணத்திற்காக பிரார்த்தனை: மன்னார்குடி ராஜகோபால சுவாமியை தரிசிப்பவர்களுக்கு ஐந்து மகா கல்யாண குணங்களான ஐஸ்வர்யம், தைரியம், புகழ், ஞானம், வைராக்கியம் ஆகியவை கிடைக்கும். மகாபாரதத்தில் புலஸ்திய மகரிஷி, பீஷ்மரிடம்
செண்பகராண்யம் எனப்போற்றப்படும் மன்னார்குடியின் மகிமையை கூறியுள்ளார்.
இத்தலத்தில் ஓரிரவு தங்கினால், ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணியம் பலன் கிட்டும் என்பது ஐதீகம். தானங்களிலேயே மிகவும் உயர்ந்தது பசுதானம் தான். கண்ணன் மதுராபுரி சிறையில் பிறந்த போது, வசுதேவர் மானசீகமாக பல்லாயிரம் பசுக்களை தானம் செய்ததாக குறிப்பு இருக்கிறது.
சிறப்பம்சம்: இந்தக் கோவிலில் ஒன்பது பிரகாரங்கள், 16 கோபுரங்கள், 24 சன்னிதிகள் உள்ளன. ஆறு சதுர ஏக்கர் பரப்பளவு கொண்டது. 154 அடி உயரமுடைய கிழக்கு ராஜகோபுரம் எதிரில் 54 அடி உயரமுடைய ஒற்றைக் கல்லாலான கருட ஸ்தம்பம் காட்சியளிக்கிறது. கோவில் அருகில் 23 ஏக்கர் பரப்பளவில் ஹரித்ராநதி எனப்படும் தெப்பக்குளம் உள்ளது. கிருஷ்ணனுடன் வாழ்ந்த கோபியரின்
உடலில் பூசியிருந்த ஹரித்ரா (மஞ்சள்) இக்குளத்தில் படிந்ததால் ஹரித்ராநதி எனப்பெயர் பெற்றது. கண்ட பேரண்ட பட்சி வாகனமும், பஞ்சமுக ஹனுமார் வாகனமும் இங்கு இருப்பது சிறப்பாகும். இங்கு தாயார் செண்பகலட்சுமி, உற்சவர் செங்கமலத்தாயார் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். உற்சவர் கோவிலை விட்டு வெளியே வருவதில்லை. இதனால் இவளை “படிதாண்டா பத்தினி’ என்பர்.
பசு, கன்றுகளுடன் கோபாலன்: இங்கு ராஜகோபாலன் இடையர் கோலத்தில் பாலகனாக காட்சி அளிக்கிறார். வேஷ்டி அணிந்து அதையே தலைப்பாகையாகச் சுருட்டி, வலது கையில் பொற்கோல் ஏந்தியுள்ளார். இடுப்பில் சலங்கை, சாவிக்கொத்து, கையில் வளையல், காலில் தண்டை கொலுசு ஆகிய அணிகலன்களை அணிந்திருக்கிறார். உடன் ஒரு பசுவும், இரண்டு கன்றுகளும் உள்ளன. இவருக்கு பிரதான நைவேத்தியம் பால். மதுரை கள்ளழகர் கோவில் போல், தினமும் மாலையில் தோசை நைவேத்தியமும் செய்யப்படுகிறது.
திருவிழா: பங்குனியில் 18 நாள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடக்கும். இதில் 16ம் நாளில் வெண்ணெய்தாழி உற்சவத்தைக் காண பக்தர்கள் அலை மோதுவர்.

 

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in

Mannargudi 1