Monthly Archives: January 2022

தர்ப்பைப் புல் பாய் மற்றும் கருங்காலி கட்டையின் நன்மைகள்!

தர்ப்பைப் புல் பாய் மற்றும் கருங்காலி கட்டை ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்..!!
Darbha Mat / Darbha Aasana
Karungali Kattai

பாயில் தூங்குவது நம் உடலில் இயற்கையாகவே குளிர்ச்சி தரும். மேலும் உடல் வலி, தூக்கம் இல்லாமல் தவிப்பது எல்லாம் குறைந்து நிம்மதியாக தூக்கம் வரும். காலம் காலமாக கோரைப் பாய் அல்லது பனை ஓலை பாயைத்தான் விரித்து படுக்கிறோம். உண்மையில், மிகச்சிறந்த மருத்துவ குணமும், நோய் எதிர்ப்புச்சக்தியும் கொண்டது தர்ப்பைப் புல் பாய். தர்ப்பைப் புல் பாய் எவ்வளவு நன்மைகளை தருகிறது என்பதை தெரிந்துகொள்ளும்போது ஆச்சர்யத்தை தருகிறது.

தர்ப்பைப் புல் :

தர்ப்பைப் புல் தொன்மையான ஒருவகை தாவரம். இது வளருமிடங்களில் மிதமான குளிர்ச்சியையும், மன அமைதியையும் உணர முடியும். ‘தர்ப்பை, புண்ணிய பூமியை தவிர வேறெங்கும் வளராது” என்பது ஐதீகம். தர்ப்பைப் புல் வளருமிடங்களில் எண்ணற்ற ஜீவராசிகள் அடைக்கலமாகியிருப்பதைப் பார்க்கலாம்.

முன்னோர்களுக்கு திதி கொடுக்கும்போதும், அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்கும்போதும், கையிலும் பிண்டத்தோடும் பயன்படுத்தப்படுவது, தர்ப்பைப் புல். அதற்கு அவ்வளவு மகிமை உள்ளது.

தர்ப்பை பாய் :

தர்ப்பைப் புல்லால் செய்யப்படும் பாய் விரிப்பில் படுத்து உறங்கினால்

உடல்சூடு தணியும்..

மன உளைச்சல் நீங்கும்..

நல்ல உறக்கம் கிடைக்கும்..

ஆரோக்கியம் நீடிக்கும்.

இந்தப் பாயில் படுத்து உறங்கினால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

பகுத்தறிவாளர்கள் இதைப் படிக்க வேண்டாம்! பக்திமான்கள் மட்டும் படிக்கவும்.

பகுத்தறிவாளர்கள் இதைப் படிக்க வேண்டாம், பக்திமான்கள் மட்டும் படிக்கவும்! ஆன்மீகத்தின் ஆழத்தை அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கான அற்புதமான பதிவு இது…

ஆதாரம் காட்ட முடியுமா…?

எந்த புத்தகத்தில் உள்ளது..?

நிரூபிக்க முடியுமா என்று கேட்கும்… இந்த பிரபஞ்சத்தில் எதுவுமே இல்லை இல்லை இல்லை என்று மறுப்பாளர் கூட்டத்திற்கு இது சம்பந்தமில்லாத பதிவு…இந்தப் பதிவு மிகவும் பழைய பதிவு தான் இருந்தாலும் இதை மீண்டும் மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்று ஆன்மீக அன்பர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மிகவும் சுவாரசியமான – இந்த முக்கிய கோவில்களுக்கு இடையில் பொதுவானது என்னவென்று நீங்கள் யூகிக்க முடியுமா?

 1. கேதார்நாத்
 2. காளஹஸ்தி
 3. காஞ்சிபுரம் – ஏகம்பரநாதனர்
 4. திருவண்ணாமலை
 5. திருவானைகாவல்
 6. சிதம்பரம் நடராஜர் கோவில்
 7. இராமேஸ்வரம்

    இவை அனைத்தும் வடகோடி இமயமலை முதல் தென்கோடி இராமேஸ்வரம் வரை ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ள சிவன் கோயில்கள்.

    இது உண்மையில் எப்படி பல ஆண்டுகளுக்கு முன்பு அமைந்தது!

     என்பது எம்பெருமான் ஈசனே!.. அறிவார்.

    இவை அனைத்தும் 79° தீர்க்கரேகையிலேயே அமைந்துள்ளன.

இந்த கோயில்களில் உள்ள இடைவெளி பல மாநிலங்களை கடந்து பல நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரங்கள் எப்படி இந்த துல்லியமான இடங்களை ஜி.பி.எஸ் இல்லாமல் அல்லது அத்தகைய சிம்மாசனம் போன்றவற்றை கொண்டு வந்தார்கள்.

என்பது ஆச்சரியமானதும் ஆகும்.

 1. கேதார்நாத் 79.0669°
 2. காளஹஸ்தி 79.7037°
 3. காஞ்சிபுரம் – ஏகம்பரநாதனர் 79.7036°
 4. திருவண்ணாமலை 78.7108°
 5. சிதம்பரம் நடராஜர் கோவில் 79.6954°
 6. திருவானைகாவல் 78.705455°
 7. இராமேஸ்வரம் 79.3129°

அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அமைய பெற்றுள்ளது.

தமிழர்கள் மதம்

 1. 280 பழைமையான சிவன் கோயில்களில் 274 சிவன் கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.
 2. 108 திவ்யதேசங்களில் 96 வைணவக்கோயில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.
 3. சைவம் வளர்த்த 63 நாயன்மாரும் பிறந்தது  தமிழ்நாட்டில்.
 4. வைணவம் வளர்த்த 12 ஆழ்வார்களும் பிறந்தது  தமிழ்நாட்டில்.
 5. சிவன் கோவில்களுக்கெல்லாம் தலைமை எனப்படும் சிதம்பரம் இருப்பது தமிழ்நாட்டில்
 6. வைணவக்கோவில்களுக்கு தலைமையான  திருவரங்கம் இருப்பது தமிழ்நாட்டில்.
 7. பஞ்சபூதங்களுக்கான கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.
 8. நவகிரகங்கள் மற்றும் 27 நட்சத்திரக்கூட்டங்களுக்கான கோவில்கள் இருப்பதும் தமிழ்நாட்டில்.
 9. பதிணென் சித்தர்களும் வாழ்ந்து சமாதியானது தமிழகத்தில்.
 10. அது மட்டுமா பழந்தமிழர்களின் ஐந்திணை கடவுள்கள் அனைத்தும் இந்து மத கடவுளே..,

அவற்றுள் பிற மத கடவுள்கள் இடம் பெறவில்லை.
குறிஞ்சி➡முருகன்
முல்லை➡திருமால்
மருதம்➡இந்திரன்
நெய்தல்➡வருண்ன்
பாலை➡கொற்றவை