Monthly Archives: March 2022

அறிந்தும்! அறியாத!! அற்புதத் தகவல்கள்!

அறிந்தும் அறியாத அற்புதத் தகவல்கள்

1. விநாயகருக்கு சாற்றிய அருகம் புல் மாலையை உதிர்த்து அதை நன்றாக காய விட்டு வியாழன், பௌர்ணமி அம்மாவசை அன்று தூபம் போட தீய சக்திகள் இருந்தால் விலகி ஓடும். இதை வியாபார இடத்திலும் செய்யலாம்.

2. தொட்டா சிணுங்கி, முடக்கத்தான், துளசி, வில்வம், கத்தாழை போன்ற செடிகளை வீட்டில் வளர்த்தால் கண் படுதல், ஏவல், சூன்யும், வினைகள் போன்ற தீய சக்திகள் எளிதில் வீட்டிற்குள் வராது.

3. வீட்டில் விக்ரகங்களை வைத்து வழிபாடு செய்பவர்கள் கறவை பசும் பால், தேங்காய் நீர், அரைத்த சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

4. மனிதனின் கை கால்கள் படாத நீரில் அல்லது பழசாறு இவைகளிலும் பண்ணலாம். இவைகள் இல்லை என்றால் செய்யாமல் இருங்கள்.

5. மயில் தோகையை வீட்டில் வைத்து இருப்பதால் முருகனின் ஆசிகள் கிடைக்கும். (சில எண்ணிக்கை மட்டும்)

6. கோவில்களில் அபிஷேகத்திற்கு கறவை பசும் பால் மட்டும் தரவும், (பதப்பட்ட பால் வேண்டாம்), அல்லது இளநீரைத் தர வேண்டும். இவைகள் உங்கள் சந்ததி அனைவரின் பாபத்தையும், சாபத்தை போக்கும் வல்லமை உடையது.

7. வெள்ளை மிளகு, கடுகு, காய்ந்த வில்வ இலைகள், நாய் கடுகு (மிளகு), பால் சாம்பிராணி, கடுக்காய், காய்ந்த வேப்ப இலைகள், ஓமம், தான்றிக் காய், காய்ந்த மருதாணி இலை, மஞ்சள் இவைகளை நன்றாக கலந்து அம்மாவசை, பௌர்ணமி, வெள்ளிகிழமை போன்ற நாட்களில் தூபம் போடுவது சகல நன்மைகளை தரும், குல சாமிகளின் ஆசிகள் கிடைக்கும்.

8. எந்த ஒரு நல்ல காரியம் துவங்க வெளியில் செல்லும் பொழுதும் அருகில் உள்ள விநாயகருக்கு ஒரு தேங்காய் உடைப்பதும், பசுவிற்கு வாழைப் பழம் தருவதும் துவங்கும் அக்காரியத்தை வெற்றியடைய செய்யும்.

9. கொப்பரை தேங்காயை துண்டுகளாகி அதை தூபமாக பெருமாளுக்கு காண்பிக்க பெருமாளும், கருப்பு சாமியும் குலத்தை காப்பார்.

10. ஒரே நாளில் 9 வகையான லிங்க மூர்த்திகளை தரிசனம் செய்ய சனி தேவரின் ஆசிகள் பெற்று, ஆயுள் தோஷம் நீங்கி ஆரோகியம் ஏற்படும் (தனியாக உள்ள கோவில்கள்).

11. பசு நெய்யை செப்புப் பாத்திரத்தில் (தாமிரம்) நிறைத்து கோவிலுக்கு தர்மம் செய்தால் வம்ச சாபம் விலக வழிகளை தெரியப்படுத்தும்.

All Hindu Spiritual Items Under One Roof
Raja Spiritual Pvt Ltd.,
Kanchipuram || Vellore
www.rssonline.in

பங்குனி உத்திரம் ஸ்பெஷல்!

பங்குனி உத்திரம் ஸ்பெஷல்!

மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு. பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாள் பங்குனி உத்திரம். தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்கின்றன புராணங்கள்.

தெய்வங்களே உத்திரத்தை சிறந்த நட்சத்திரம் என்று தேர்வு செய்த பெருமை உண்டு.

பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை :

👉 திருப்பரங்குன்றத்தில் முருகன் – தெய்வானை திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.

👉 மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள்.

👉 பிரம்மன், தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தைப் பெற்றார்.

👉 தன் மனைவி இந்திராணியை பிரிந்திருந்த இந்திரன், மீண்டும் அவளுடன் சேர்ந்த நாள் இது.

👉 சந்திர பகவான், கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம்.

👉 ராமபிரான் – சீதாதேவி, பரதன் – மாண்டவி, லட்சுமணன் – ஊர்மிளை, சத்ருக்னன் – ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த தினம்.

👉 இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது இந்த நாளில் தான்.

👉 மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.

👉 ஆண்டாள் – ரங்கமன்னார் திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.

  👉 இந்த நாளில் தான் இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது.

👉 பங்குனி உத்திரத்தில்தான் தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் பிறந்தார்.

👉 அர்ச்சுனன் பிறந்தது பங்குனி உத்திரத்தில்தான்.

👉 வள்ளி அவதாரம் செய்தது பங்குனி உத்திரத்தில்தான்.

👉 காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது இந்த நாளில் தான்.

👉 தனது தவத்தைக் கலைத்த மன்மதனை, சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். பின்னர், தன்னை வணங்கி மன்றாடிய ரதிதேவியின் வேண்டுகோளுக்கு இரங்கி, மன்மதனை மீண்டும் சிவனார் உயிர்ப்பித்தது பங்குனி உத்திரம் திருநாளில்தான்.

👉 சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக்கோலத்தில் பரமன் காட்சி தந்தது இந்த நாளில்தான்.

👉 சாஸ்தா அவதரித்தது பங்குனி உத்திர திருநாளில்.

இவ்வளவு சிறப்புகள் ஒன்றாகப் பொருந்திய பங்குனி உத்திர நாளில் ஆலயம் சென்று வழிபடுவோம். இறைவனின் ஆசியைப் பெறுவோம்…!

All Hindu Spiritual Items Under One Roof
Raja Spiritual Pvt Ltd.,
Kanchipuram || Vellore
www.rssonline.in