Author Archives: admin

நாச்சியார் கோலத்தில் அழகியசிங்கப்பெருமாள்! நவராத்திரி உற்சவம் – ஐந்தாம்நாள்

நாச்சியார் கோலத்தில் அழகியசிங்கப்பெருமாள்! நவராத்திரி உற்சவம் – ஐந்தாம்நாள்!!

திருவேளுக்கை #திவ்யதேசம் – ஸ்ரீ அழகியசிங்கப்பெருமாள் திருக்கோவில் #நவராத்திரி#உற்சவம்#ஐந்தாம்நாள்ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் சமேத ஸ்ரீ அழகியசிங்கப்பெருமாள் உபய நாச்சிமார்களுடன்#நாச்சியார் திருக்கோலத்தில் கண்ணாடி அறையில் சேவை..!🙏🏻

நவராத்திரி விழா நல்வாழ்த்துகள்..!

அபிஷேகம்அலங்காரங்கள்ஆராதனைகள் செய்யத் தேவையான அனைத்தும் www.rssonline.in இல் கிடைக்கும்.

நவராத்திரி பூஜை முறை!

ஒன்பது நாள்களும் போட வேண்டிய கோலங்கள்:

• முதல் நாள் – அரிசி மாவு பொட்டு

• இரண்டாம் நாள் – கோதுமை மாவு கட்டம்

• மூன்றாம் நாள் –முத்து  மலர்

• நான்காம் நாள் – அட்சதை படிக்கட்டு

• ஐந்தாம் நாள் – கடலை பறவையினம்

• ஆறாம் நாள் – பருப்பு தேவி நாமம்

• ஏழாம் நாள் – திட்டாணி (வெள்ளை மலர் களால் ஆன கோலம்)

• எட்டாம் நாள் – காசு பத்மம் (தாமரைக் கோலம்)

• ஒன்பதாம் நாள் – கற்பூரம் ஆயுதம்  (வாசனைப் பொடிகளை கலந்து கோலமிட்டால் சிறப்பு)

ஒன்பது நாள்களும் பாட வேண்டிய ராகங்கள்:

• முதல்நாள் – தோடி

• இரண்டாம் நாள் – கல்யாணி

• மூன்றாம் நாள் – காம்போதி, கௌளை

• நான்காம் நாள் – பைரவி

• ஐந்தாம் நாள் – பந்துவராளி

• ஆறாம் நாள் – நீலாம்பரி

• ஏழாம் நாள் – பிலஹரி

• எட்டாம் நாள் – புன்னாகவராளி

• ஒன்பதாம் நாள் – வஸந்தா

ஒன்பது நாள்களும் அணிவிக்க வேண்டிய மாலைகள்:

• முதல் நாள் – மல்லிகை

• இரண்டாம் நாள் – முல்லை

• மூன்றாம் நாள் – செண்பகம், மரு

• நான்காம் நாள் – ஜாதிமல்லி

• ஐந்தாம் நாள் – பாரிஜாதம் அல்லது வாசனை மலர்கள்

• ஆறாம் நாள் – செம்பருத்தி

• ஏழாம் நாள் – தாழம்பூ, பாரிஜாதம், விபூதிப்பச்சிலை

• எட்டாம் நாள் – சம்பங்கி, மருதாணிப்பூ

• ஒன்பதாம் நாள் – தாமரை, மரிக்கொழுந்து

ஒன்பது நாள்களும் விருந்தினருக்குக் கொடுக்க வேண்டிய பழங்கள்:

• முதல் நாள் – வாழைப்பழம்

• இரண்டாம் நாள் – மாம்பழம்

• மூன்றாம் நாள் – பலாப்பழம்

• நான்காம் நாள் – கொய்யாப்பழம்

• ஐந்தாம் நாள் – மாதுளை

• ஆறாம் நாள் – ஆரஞ்சு

• ஏழாம் நாள் – பேரிச்சம்பழம்

• எட்டாம் நாள் – திராட்சை

• ஒன்பதாம் நாள் – நாவல் பழம்

ஒன்பது நாள்களும் செய்ய வேண்டிய பிரசாதங்கள்:

• முதல் நாள் – சுண்டல், வெண்பொங்கல்

• இரண்டாம் நாள் – புளியோதரை

• மூன்றாம் நாள் – சர்க்கரைப் பொங்கல்

• நான்காம் நாள் – கதம்பம் (காய்கறிகள் கலந்த கதம்ப சாதம்)

• ஐந்தாம் நாள் – ததியோதனம் தயிர்சாதம், பொங்கல்

• ஆறாம் நாள் – தேங்காய் சாதம்

• ஏழாம் நாள் – எலுமிச்சை சாதம்

• எட்டாம் நாள் – பாயஸôன்னம் ( பால் சாதம்)

• ஒன்பதாம் நாள் – அக்கார அடிசில் (பச்சரிசி, பால், சர்க்கரை கலந்த பால் பாயசம்), சர்க்கரை பொங்கல்.

www.rssonline.in

நவராத்திரி விழா நல்வாழ்த்துகள்..!

அபிஷேகம்அலங்காரங்கள்ஆராதனைகள் செய்யத் தேவையான அனைத்தும் www.rssonline.in இல் கிடைக்கும்.

“நரசிம்மர் வழிபாடு” – 40 தகவல்கள்!!

நரசிம்மர் வழிபாடு- 40 தகவல்கள்:

 1. நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்.
 2. நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.
 3. நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும், பொருள் புரியாத மொழிகளும், விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை நீங்கி, உயர் நிலையைப் பெற்றன.
 4. நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் “சிங்கவேள்குன்றம்” என்பதும் ஒன்று. இத்தலம் மீது பாடப்பட்டுள்ள பதிகங்கள், பாசுரங்கள், செய்திகள் அனைத்தும் நரசிம்ம அவதாரம் மட்டுமே இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
 5. நரசிம்ம அவதாரத்தின் முதல் குறிப்பு பரிபாடலில் காணப்படுகிறது.
 6. நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு.
 7. திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்பட வில்லை. ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.
 8. நரசிம்ம அவதாரம் பற்றி முதன் முதலில் முழுமையாக சொன்னவர் கம்பர்தான்.
 9. திருத்தக்கதேவர் தனது சீவக சிந்தாமணியில், “இரணியன்பட்ட தெம்மிறை எய்தினான்” என்று நரசிம்ம அவதாரம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
 10. இரணியனின் ரத்தத்தை குடித்ததால் சீற்றம் பெற்ற நரசிம்மரின் ரத்தத்தை சிவன் சரபப்பறவையாக வந்து குடித்தார். இதன்பிறகே நரசிம்மரின் சீற்றம் தணிந்ததாக சொல்வார்கள். இந்த தகவல் அபிதான சிந்தாமணியில் கூறப்பட்டுள்ளது.
 11. சோளிங்கரின் உண்மையான பெயர் சோழசிங்கபுரம். நரசிம்மரின் பெருமையை பெயரிலேயே கூறும் இந்த ஊர் பெயரை ஆங்கிலேயர்கள் சரியாக உச்சரிக்க இயலாமல், அது சோளிங்கர் என்றாகிப் போனது.
 12. சிங்க பெருமாள் கோவில், மட்டப்பள்ளி, யாதகிரிகட்டா, மங்கள கிரி ஆகிய தலங்களில் நரசிம்மர் சன்னதிகள் குகைக் கோவிலாக உள்ளன.
 13. கீழ் அகோபிலத்தில் நாம் கொடுக்கும் பாகை நைவேந்தியத் தில் பாதியை நரசிம்மர் ஏற்றுக் கொண்டு மீதியை அவர் வாய் வழியே வழிய விட்டு நமக்கு பிரசாதமாக தருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
 14. நங்கநல்லூர் நரசிம்மர் ஆலயம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் இதை 1974-ம் ஆண்டு கண்டுபிடித்து வெளிப்படுத்தினார்கள்.
 15. சிவனை கடவுளாக ஏற்ற ஆதிசங்கரர், ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றித் துதித்ததும் அவருக்கு உடனே நரசிம்மர் காட்சி கொடுத்தார்.
 16. நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பாகைம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும்.
 17. “எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன்” என்பதை உணர்த்தவே பகவான், நரசிம்ம அவதாரம் எடுத்தார். எனவே நரசிம்மரை எங்கும் தொழலாம்.
 18. திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும்.
 19. நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர்.
 20. நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம்.
 21. நரசிம்மனின் தேஜஸ் காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
 22. நரசிம்ம அவதாரம் பற்றி ஜெர்மன் அறிஞர் மாக்ஸ்முல்லர் கூறுகையில், `An Electric Phenomenon’ என்று கூறி உள்ளார்.
 23. இரண்யகசிபுவை வதம் செய்த போது எழுந்த நரசிம்மரின் இம்ம கர்ஜனை 7 உலகங்களையும் கடந்து சென்றதாக குறிப்புகள் உள்ளது.
 24. மகாலட்சுமிக்கு பத்ரா என்றும் ஒரு பெயர் உண்டு. இதனால் நரசிம்மனை பத்ரன் என்றும் சொல்வார்கள். பத்ரன் என்றால் மங்களமூர்த்தி என்று அர்த்தம்.
 25. பகவான் பல அவதாரங்களை எடுத்தாலும், அவனுடைய நாமங்கள் இறுதியில் நரசிம்மரிடத்திலேதான் போய் முடியும் என்று கருதப்படுகிறது.
 26. சகஸ்ரநாமத்தில் முதன் முதலாக நரசிம்ம அவதாரம்தான் இடம் பெற்றுள்ளது.
 27. நரசிம்ம அவதாரத்தை எதைக் கொண்டும் அளவிட முடியாது என்ற சிறப்பு உண்டு.
 28. ராமாயணம், மகாபாரதம், பாகவதம், 18 புராணங்கள், உப புராணங்கள் அனைத்திலும் நரசிம்மருடைய சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.
 29. நரசிம்ம மந்திரம் ஒரு எழுத்தில் தொடங்கி, ஒரு லட்சத்து நூற்றி முப்பத்திரண்டு என்று விரிந்து கொண்டே போய் பலன் தரக்கூடியது.
 30. நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.
 31. வேதாத்ரியில் உள்ள யோக நரசிம்மர் இடுப்பில் கத்தி வைத்துக் கொண்டிருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு செல்பவர்கள் இவரை வணங்கி சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.
 32. வாடபல்லி தலத்தில் உள்ள நரசிம்மரின் மூக்குக்கு எதிரில் ஒரு தீபம் ஏற்றப்படும். அந்த தீபம் காற்றில் அசைவது போல அசையும், நரசிம்மரின் மூச்சுக் காற்று பட்டு அந்த தீபம் அசைவதாகக் கருதப்படுகிறது. அதே சமயத்தில் நரசிம்மரின் கால் பகுதியில் ஏற்றப்படும் தீபம் ஆடாமல் அசையாமல் நின்று எரியும்.
 33. மட்டபல்லியில் உள்ள நரசிம்மரை வணங்கினால் மன சஞ்சலங்கள் நீங்கும்.
 34. நரசிம்மரை வழிபடும் போது “ஸ்ரீநரசிம்ஹாய நம” என்று சொல்லி ஒரு பூ-வைப் போட்டு வழிபட்டாலே எல்லா வித்தையும் கற்ற பலன் உண்டாகும்.
 35. “அடித்த கை பிடித்த பெருமாள்” என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறு வினாடியே உதவுபவன் என்று இதற்கு பொருள்.
 36. நரசிம்மனிடம் பிரகலாதன் போல நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பக்தி இருந்தால் அதைகொடு, இதை கொடு என்று கேட்க வேண்டியதே இல்லை.
 37. எல்லா வற்றிலுமே நரசிம்மர் நிறைந்து இருக்கிறார். எனவே நீங்கள் கேட்காமலே அவர் உங்களுக்கு வாரி, வாரி வழங்குவார். நரசிம்மரை ம்ருத்யுவேஸ்வாகா என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.
 38. ஆந்திராவில் நரசிம்மருக்கு நிறைய கோவில் இருக்கிறது. சிம்ஹசலம் கோவிலில் மூலவரின் உக்கிரத்தை குறைக்க வருடம் முழுவதும் சிலையின் மீது சந்தனம் பூசி மூடி வைத்திருப்பார்கள். வருடத்தில் ஒரு நாள் மூலவரை சந்தனம் இல்லாமல் பார்க்க முடியும்.
 39. மங்களகிரி கோவிலில் உக்கிரத்தை குறைக்க பானகம் ஊற்றி கொண்டே இருப்பார்கள். மூலவரின் பெயரும் பானக லட்சுமி நரசிம்ம சுவாமி.
 40. யோகா சொல்லி கொடுக்கும் நரசிம்மர் கோவில்கள் பல உண்டு. ஆமை அவதாரத்தில் உள்ள ஸ்ரீகூர்மம் கோவில் எதிரிலும் ஒரு யோகானந்த நரசிம்ம சுவாமி கோவில் உண்டு. வேதாத்ரி என்ற ஊரில் பஞ்ச நரசிம்ம மூர்த்தி தான் மூலவர்.
“Narasimma Jayanti”

🙏🏻 “ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம்” 🙏🏻

சித்ரா பௌர்ணமி சிறப்பு!

சித்திரா பௌர்ணமி – 16 ஏப்ரல் 2022

சித்ரா பௌர்ணமி என்பது புராணங்களில் சித்ரகுப்தன் பிறந்தநாள் ஆகும். நம்முடைய பாவ புண்ணிய கணக்குகளை ஒன்றுவிடாமல் எழுதிவைத்து, நம்முடைய உயிர் பிரிந்ததும், நம் நரகத்திற்கு செல்ல போகின்றோமா அல்லது சொர்க்கத்திற்கு செல்ல போகின்றோமா என்பதை நிர்ணயிப்பது இந்த சித்திர குப்தனின் கையில் இருக்கும் கணக்கு புத்தகத்தில் தான் உள்ளது.

சித்திரா பௌர்ணமி புராண கதை:

தமிழ் வருடத்தின் முதல் மாதமான, சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி தினத்தையே சித்திரா பௌர்ணமி திருநாளாக எல்லோரும் கொண்டாடி வருகின்றனர். இந்த தினத்தில் குறிப்பாக, சித்திரகுப்தரை வழிபட வேண்டும் என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. இன்றைய தினம் தான் சித்திர குப்தனின் பிறந்தநாள் என்றும் சில சாஸ்திர குறிப்புகள் கூறுகிறது.

ஓர் அழகான ஓவியத்தை ரசித்து மகிழ்ந்த பார்வதிதேவி சிவபெருமானிடம் இந்த ஓவியத்தை உயிர்ப்பித்துதாருங்கள் என வேண்டினார். சிவனும் தன் மூச்சுக்காற்றால் உயிர்ப்பித்துக் கொடுத்தார். சித்திரம் மூலம் சித்ராபௌர்ணமியன்று பிறந்ததால் அவர் சித்திரகுப்தன் என்றழைக்கப்பட்டார். அவரே எமதர்மராஜரிடம், பாவபுண்ணியக்கணக்கு எழுதும் எழுத்தராக பணியாற்றுபவர் என்கிறது புராணம்.

சித்ரா பௌர்ணமி சிறப்பு:

இந்திரன் பாபவிமோசனம் வேண்டி அனைத்து சிவஸ்தலங்களையும் சென்று வணங்கி வரும் நிலையில், மதுரை சொக்கநாரைத் தரிசித்து பாவ விமோசனம் பெற்ற புண்ணிய நாள் சித்ராபௌர்ணமி அன்று தான் எனவும், சீதாராமர் வனவாசம் முடிந்து நகருக்கு திரும்பிய நாள் சித்ரா பௌர்ணமி நாள் எனவும். மதுரை வைகைக்கரையில் கள்ளழகர் எழுந்தருளிய நாள் சித்ராபௌர்ணமி எனவும் புராணங்கள் கூறுகின்றன.

செவ்வாய் தோஷம் நீங்கும்:

நவக்கிரக கேதுவின் தேவதை சித்திரகுப்தர். எனவே கேதுவின் தோஷங்கள், தடைகள் குழப்பங்கள் தீரும். கடன் பிரச்சினைகள், சத்ரு துன்பங்கள் நீங்கி சுலபமாகும்.  நவக்கிரகதோஷங்கள்,பாவ விமோசனம் நீங்குகிறது. புத்திரபாக்கியம் ஏற்படுகிறது. திருமணத்தடைகள் நீங்கி திருமணம் நடப்பது, தொழில் தடைகள் நீங்கி தொழில் மேன்மை கிடைக்கிறது. செவ்வாயின் நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிப்பதால்  செவ்வாய் தோஷம் நீக்குகிறது. சந்திரனின் கரகத்துவமான தனம், உடல், மனம் மேன்மையடைகிறது. அன்னைதினம் தாய்க்கிரகம் சந்திரன் அதிபலம் பெறும் இந்த நாள் பெண்கள் தாயையும் தாய் வம்சத்திற்கு செய்ய வேண்டிய ஆகம கடமைகளையும் செய்ய வேண்டிய நாள். மாங்கல்ய பலம் பெறும் நாள்.

தோஷம் போக்கும் சித்ரகுப்தன்:

Shri Karnaki Ambal Samedha Chitra Gupta Swamy

நவக்கிரகங்களில் ஒன்றான கேதுவுக்குரிய பிரத்யேக தேவதையாக சித்ரகுப்தனைக் கூறுவர். ஞானக்காரகனான கேது, புர்வ பண்ணியத்தை நிர்ணயித்து கொடுப்பவர். ஒருவர் ஜாதகத்தில் கேது சரியில்லை என்றால் பல பிரச்சனைகளும் உடல் உபாதைகளும் அனுபவிக்க நேரிடும். அதனால்தான் ஜோதிட சாஸ்திரம், “ராகுவை போல் கொடுப்பார் இல்லை, கேதுவை போல் கெடுப்பார்” இல்லை என்கிறது. இப்பேர்பட்ட கேது பகவானின் தொல்லையில் இருந்து விடுபட வருடத்திற்கு ஒருமுறையாவது சித்திரகுப்தனை வணங்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். ஸ்ரீவாஞ்சியம், ஸ்ரீ வாஞ்சிநாதர் திருக்கோயில் யமதர்மராஜனுக்கும் சித்திரகுப்தருக்கும் தனி சன்னதி உண்டு. காஞ்சிபுரத்தில் சித்திரகுப்தருக்கு கோவில் உள்ளது. இங்கு இவரை தரிசனம் செய்வதால் வாழ்வில் நல்ல பலன் கிடைக்கும்.

அபிஷேகம், அலங்காரங்கள், ஆராதனைகள் செய்யத் தேவையான அனைத்தும் www.rssonline.in இல் கிடைக்கும். (Now, Abisheka, Alankara & Aaradhanai items are available at www.rssonline.in

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

ஸ்ரீ ராம நவமி சிறப்பு: தெரிந்த புராணம்… தெரியாத கதை!

ஸ்ரீ ராம நவமி சிறப்பு!

Sri Rama Navami

தெரிந்த புராணம்… தெரியாத கதை!

ஸ்ரீகிருஷ்ணனுக்கு நண்பனாக இருந்து, அவன் அருளால் தரித்திரம் நீங்கி, சுதாமன் எனும் குசேலன் குபேரனான கதை, நம்மில் பலருக்குத் தெரியும். இது ராமாவதாரத்துக்கு அடுத்த கிருஷ்ணாவதாரத்தில் நடந்த கதை.

ஆனால், ராமாயணத்திலும் ஸ்ரீராமன் அருள்பெற்ற ஒரு குசேலன் இருந்தான் என்றால், ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? இந்த ராமாயணக் குசேலனின் பெயர்: அனந்தன்

ஒருமுறை வசிஷ்டரின் ஆசிரமத்தில் ஸ்ரீராமன் தனது சகோதரர்கள் லட்சுமணன், பரதன் மற்றும் சத்ருக்னனுடன் வித்யாப்பியாஸம் செய்துகொண்டிருந்தான். அப்போது அவனுக்கு உற்ற நண்பன் ஒருவனும் இருந்தான். அவன் பெயர் அனந்தன். பரம ஏழையான அவன், வசிஷ்டரின் ஆசிரமத்தில் குருவுக்கு சேவை செய்து கொண்டிருந்தான்.

குருகுலத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த ஸ்ரீராம- லட்சுமண சகோதரர்களுக்குத் தொண்டு செய்வதில், அனந்தன் பேரானந்தம் கொண்டான். குறிப்பாக, ஸ்ரீராமன்மீது அவன் வைத்த பற்றும் பாசமும் அளவுகடந்ததாக இருந்தது. பதிலுக்கு அனந்தனிடம் ஸ்ரீராமனும் பேரன்பு காட்டினான். இருவரும் சேர்ந்து ஆனந்தராமனாக குருகுலத்தில் விளங்கினர்.

ஸ்ரீராமனுக்கு ஏடுகளை எடுத்து வைத்தல், எழுத்தாணியைக் கூராக்குதல், வில்லைத் துடைத்தல், அஸ்திரங்களை எடுத்து வைத்தல், உணவு பரிமாறுதல் ஆகிய பணிகளை பெருமகிழ்ச்சியோடு செய்து வந்தான் அனந்தன்.

ஸ்ரீராமனை ஒருநாள் காணவில்லை என்றாலும், அவன் மனம் ஏங்கித் தவிக்கும். ‘சுதாமனும் கண்ணனும் போல’ வசிஷ்டருடைய குருகுலத்தில் அனந்தனும் ஸ்ரீராமனும் நட்பு கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு மாதமும் சில நாட்கள் வனத்துக்குச் சென்று, தர்ப்பைப் புல் பறித்து வரவேண்டியது அனந்தனின் கடமை. அதுபோல் ஒருமுறை அனந்தன் வனத்துக்குச் சென்றிருந்தான். அந்த நேரத்தில் ஸ்ரீராமனின் குருகுலம் முடிந்து, குருவிடம் விடைபெற்று சகோதரர்களுடன் அயோத்திக்குச் சென்றுவிட்டான். வனத்தில் இருந்து திரும்பி வந்த அனந்தன் விவரம் அறிந்து தாங்கமுடியாத வருத்தம் கொண்டான்.

உடனே ஸ்ரீராமனைக் காண அவன் மனம் துடித்தது. உடனே புறப்பட்டு, அயோத்தியில் உள்ள ஸ்ரீராமனின் அரண்மனைக்குச் சென்றான். அங்கே அவனுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போதுதான் மகரிஷி விஸ்வாமித்திரருடன் ஸ்ரீராமனும் லட்சுமணனும் யாக சம்ரக்ஷணத்துக்காக வனத்துக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தனர்.

துக்கம் அனந்தனின் தொண்டையை அடைத்தது. ஒன்றும் அறியாத பாலகனான ஸ்ரீராமன் கானகம் செல்ல நேர்ந்ததை எண்ணிக் கலங்கினான். ஸ்ரீராமனைக் காட்டுக்கு அனுப்பிய தசரதனையும், அழைத்துச் சென்ற விஸ்வாமித்திரரையும் மனத்துக்குள் கடிந்துகொண்டான்.

பாவம் ஸ்ரீராமன்! காட்டில் அவன் என்ன செய்வான்? அவனுக்கு யார் சேவை செய்வார்கள்? நித்திய கர்மங்களுக்கு தர்ப்பை, சமித்து போன்றவற்றை யார் சேகரித்துத் தருவார்கள்? இப்படியெல்லாம் அவன் மனம் தவித்தது. எப்படியும் ஸ்ரீராமனைத் தேடிக் கண்டுபிடித்து, அவனுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டான் அனந்தன்.

தன் குரு வசிஷ்டரிடம்கூடச் சொல்லிக்கொள்ளாமல், நேராகக் காட்டை நோக்கிச் சென்றான். அடர்ந்த காட்டில், ‘ராமாராமா…’ என்று கதறிக்கொண்டு, ஸ்ரீராமனைத் தேடி அலைந்தான். காட்டில் வழி தவறி, ஒரு இருண்ட பகுதிக்குள் அகப்பட்டுக்கொண்டான். அங்கே… பல நாட்கள் ஸ்ரீராமனைத் தேடியும், அவனைக் காணாமல் அனந்தனின் மனம் வாடியது. ஸ்ரீராமனைக் காணாமல் ஊர் திரும்பவும் அவனுக்கு விருப்பமில்லை. ‘ராமா… ராமா…’ என்று ஜபித்துக்கொண்டு, அன்ன ஆகாரமின்றி, அந்தக் காட்டிலேயே ஓரிடத்தில் நிஷ்டையில் அமர்ந்தான். அவன் அமர்ந்த இடத்தில், அவனை மூடியவாறு புற்று வளர்ந்துவிட்டது. ஆனால், அவனது ‘ராம’ ஜபம் மட்டும் நிற்கவில்லை.

காலச் சக்கரம் வேகமாகச் சுழன்றது. இதற்கிடையில், ராமாயண சம்பவங்கள் அனைத்துமே நிகழ்ந்து முடிந்திருந்தன. விஸ்வாமித்திரரின் யாகத்தை முடித்துக் கொடுத்து, சீதையை மணம் முடித்து, தந்தை சொல் காக்கக் கானகம் சென்று, சீதையைப் பிரிந்து, அனுமனின் உதவியால் அவள் இருக்கும் இடம் அறிந்து, இலங்கை சென்று ராவண சம்ஹாரம் செய்து சீதையை மீட்டு, அயோத்தி திரும்பியிருந்தான் ஸ்ரீராமன். அவன் பட்டாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. இத்தனை நடந்ததும், அது எதுவும் தெரியாமல் புற்றுக்குள் ‘ராமா… ராமா..’ என்று தவமியற்றிக்கொண்டிருந்தான் அனந்தன்.

ஸ்ரீராமனின் பட்டாபிஷேகத்தைக் காண பாரத தேசத்தின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் மக்களும், மன்னர்களும், மகரிஷிகளும் அயோத்திக்கு வந்துகொண்டிருந்தனர். அப்போது காட்டு வழியே சென்று கொண்டிருந்த சில மகரிஷிகள் ‘ராம’ நாமத்தைப் பாடிக்கொண்டே சென்றனர். அவர்களில் ஒருவரது கால் பட்டு அனந்தன் தவமியற்றிக்கொண்டிருந்த புற்று இடிந்தது. அனந்தன் தவம் கலைந்து எழுந்தான். ‘ராமா… ராமா… எங்கிருக்கிறாய் என் ராமா?’ என்று கதறினான்.

காலச் சுழற்சியினால் தனக்கு வயதாகியிருப்பதைக்கூட அவன் அறியவில்லை. பல ஆண்டுகள் முடிந்துபோனதையும் அவன் உணரவில்லை.

இன்னும் குழந்தைபோல ஸ்ரீராமனைத் தேடினான். அப்போது மகரிஷிகள் கூட்டத்தில் ஒருவர், அவன் யாரென்று விசாரித்துத் தெரிந்துகொண்டு, அவனுக்கு ஆறுதல் கூறினார். ஸ்ரீராமன் வனவாசம் முடிந்து பட்டாபிஷேகம் செய்து கொள்ளப் போவதையும், அதற்காகவே எல்லோரும் அயோத்தி செல்வதையும் அனந்தனுக்குத் தெரிவித்தார். ராமனுக்கு ஏற்பட்ட துன்பங்களைக் கேட்டு கண்ணீர் வடித்தான் அனந்தன். இருந்தாலும், ராமனுக்குப் பட்டாபிஷேகம் நடக்கப்போகும் செய்தி அறிந்து, அதைக் காண மகரிஷிகளுடன் அயோத்தி புறப்பட்டான்.

அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்று பட்டாபிஷேக நாள். எங்கும் வேத கோஷமும், மங்கல இசையும் முழங்கிக்கொண்டிருந்தன. குல குரு வசிஷ்டர், விஸ்வாமித்திரர் முதலானோர் பட்டாபிஷேக ஏற்பாடுகளை முன்னின்று செய்து கொண்டிருந்தனர். மக்கள், மன்னர்களுடன், தேவர்களும் தேவ மாதர்களும் அங்கே வந்திருந்தனர்.

ஸ்ரீராமன் அதிகாலையிலேயே மங்கல நீராடி, ஆடை அணிகலன்கள் அணிந்து, தன் குலதெய்வமான சூரிய தேவனையும், தாயார் மூவரையும் வணங்கி, கொலு மண்டபம் நோக்கி கம்பீரமாக நடந்து வந்தான். அப்போது எல்லோரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடையும் வகையில் உரத்த குரலில், ”அடே ராமா! இத்தனை காலம் எங்கிருந்தாயடா? உன்னை எத்தனை காலமாய் தேடுகிறேனடா?” என்று குரல் கொடுத்தபடியே ராமனை நோக்கி ஓடி வந்தான் அனந்தன்.

 ராமனை இறுகத் தழுவிக் கொண்டான்.

கந்தல் உடையில், ஜடா முடியுடன் பரதேசிக் கோலத்தில் பாமரன் ஒருவன், ‘அடே ராமா’ என்று கூவி அழைத்தது கண்டு, அவையினர் அதிர்ச்சியுற்றனர். ‘எவனோ பைத்தியக்காரன் இவ்வாறு செய்கிறான்’ என்று கோபத்துடன் காவலர்கள் அவனைப் பிடித்திழுக்க விரைந்தபோது, ஸ்ரீராமன் அனந்தனை நெஞ்சாறத் தழுவி, அவன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து, ”என்னை மன்னித்துவிடு அனந்தா!” என்று உணர்ச்சி பொங்கக் கூறினான்.

”உன்னிடம் சொல்லிக்கொள்ளாமலே குருகுலத்தில் இருந்து வந்துவிட்டேன். என் பிரிவினால் நீ எவ்வளவு துயரம் அடைந்திருப்பாய் என்பதை நான் அறிவேன். என் தவற்றை மன்னித்துவிடு” என்று மீண்டும் சமாதானம் செய்தான். அதைக் கேட்டு எல்லோரும் திடுக்கிட்டனர். தன்னைப் போலவே தன் பிரபுவிடம் பக்தி செலுத்தும் மற்றொரு பக்தன் இருக்கிறான் என்றெண்ணிப் பூரித்த அனுமனின் கண்களிலும் நீர் சுரந்தது.

அப்போது வசிஷ்டர், ”ராமா… இவர் யார்?” என்று கேட்க, ”தெரியவில்லையா குருதேவா? இவன் என் பள்ளித் தோழன். தங்கள் குருகுலத்தில் சேவை செய்த சீடன் அனந்தன். இத்தனை பெரிய அவையில் எல்லோரும் என்னைப் ‘பிரபு’ என்றும் ‘மகாராஜா’ என்றும்தான் அழைக்கிறார்கள். என்னை ‘அடே ராமா’ என்று அழைக்க என் தந்தை தசரதன் இல்லையே என ஏங்கினேன். அந்தக் குறையைத் தீர்த்து வைத்ததன் மூலம் என் தந்தைக்கு நிகரானவன் ஆகிவிட்டான் இந்த அனந்தன்!” என்று கூறினான் ஸ்ரீராமன். வசிஷ்டரும் அனந்தனைக் கட்டித் தழுவி ஆசீர்வதித்தார். எல்லோர் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்!

”இத்தனை நாட்கள் எனக்காகத் தவமிருந்து, இடையறாமல் என் நாமத்தை ஜபித்து, என்னைத் தேடிக் கண்டடைந்த இவனுக்கு நான் இந்த அவையில் மரியாதை செய்யக் கடமைப்பட்டுள்ளேன்” என்று கூறிய ஸ்ரீராமன் அனுமனை நோக்கி, ‘உன்னைப் போலவே என்னை நேசிக்கும் இவனுக்கு என்ன கௌரவம் தரலாம்?” என்று கேட்டான்.

”பிரபு! தங்கள் தந்தைக்குச் சமமானவர் இவர் என்று கூறினீர்கள். தாங்கள் சிம்மாசனத்தில் அமரும் முன்பு, இவரை அதில் அமர்த்தி மரியாதை செய்வது இவருக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்குமே பெருமை!” என்று கூறினான் அனுமன். எல்லோரும் அதை ஆமோதித்தனர்.

இத்தனை பெரிய மரியாதைக்குத் தான் தகுதியானவனா என்றெண்ணிக் கூனிக் குறுகினான் அனந்தன். அவன் வேண்டாம் வேண்டாம் என்று தடுத்தும் கேளாமல் அவனைச் சிம்மாசனத்தில் அமர்த்தி, மாலை அணிவித்து மரியாதை செய்து, பாத பூஜையும் செய்தான் ஸ்ரீராமன். அதன் பின்பே, ஸ்ரீராமன் பட்டாபிஷேகம் ஆரம்பமானது.

ராமாவதாரத்தில் பகவானின் அன்பினால் கட்டுண்டு ஆனந்தமடைந்த அனந்தனே, ஒருவேளை அதே பேரானந்தத்தை மீண்டும் அனுபவிக்க கிருஷ்ணாவதாரத்தில் குசேலனாக வந்தானோ என்று தோன்றுகிறது அல்லவா?!

எனவே இத்தனை சிறப்பு மிக்க ஸ்ரீ ராமரை நாமும் அவரது பிறந்த நாளான சித்திரை புனர்பூசம் நக்ஷத்திரம் நவமி திதி கூடிய நன்னாளில் ஸ்ரீ ராமரை வணங்குவோம்.

🙏ஸ்ரீ ராம ! ஜெய ராம !  ஜெயஜெய ராமா !🙏

அபிஷேக அலங்காரங்கள், ஆராதனைகள் செய்யத் தேவையான அனைத்தும் www.rssonline.in இல் கிடைக்கும். (Now, Abisheka, Alankara & Aaradhanai items are available at www.rssonline.in/rama-navami)

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

உகாதி (Ugadi) அல்லது யுகாதி (ఉగాది / ಯುಗಾದಿ) சிறப்பு!

யுகாதிலு பண்டிகைலு ஆந்திரா, கர்நாடகம், மற்றும் தமிழகத்தில் கொண்டாடப்படும் பண்டிகை யுகாதி என்றழைக்கப்படும் தெலுங்கு வருடப்பிறப்பு.

உகாதி (Ugadi) அல்லது யுகாதி (தெலுங்கு: ఉగాది, கன்னடம்: ಯುಗಾದಿ) என்பது தெலுங்கு மற்றும் கன்னடப் புத்தாண்டு தினத்தை கொண்டாடும் பண்டிகை ஆகும். மகாராஷ்டிர மக்கள் இதே நாளை குடிபாட்வா(गुढीपाडवा) எனவும் சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் பலவாறாகக் கொண்டாடுகின்றனர். உகாதி ஒவ்வோர் ஆண்டும் ஆங்கில நாட்காட்டியின் படி மார்ச்சு அல்லது ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்து சூரியசந்திர நாட்காட்டியின் படி, உகாதி சைத்ர (சித்திரை) மாதத்தின் முதல் நாளாக கருதப்படுகிறது.

 யுகாதி என்றால் யுகத்தின் ஆதி அதாவது ஆரம்பம் என்று பொருள். யுகத்தின் தொடக்கம் மட்டுமில்லாமல் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கமும் இவ்வாறு அழைக்கப்படுது.   சைத்ர (சித்திரை) மாதத்தின் முதல் நாளில் பிரம்மா இந்த  உலகத்தை படைத்ததாக பிரம்மபுராணத்தில் கூறப்படுது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. மேலும் சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பை குறிக்கின்றது.

 சம்ஹத்தர கௌரி விரதம் என்ற விசேஷ விரதம் அனுஷ்டிக்கப்படுது. நாம் எல்லோரும் வேத வராகக் கர்ப்பத்தில் இருக்கிறோம். அந்தக் கர்ப்பம் தொடங்கிய நாளும் தேவர்களால் இன்று கொண்டாடப்படுகிறது. சூரியன் பன்னிரெண்டு ராசிகளில் நிற்பதைக் குறிக்கும் வகையில் சௌரமான மாதங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. அதேப்போல் சந்திரன் நிற்கின்ற ஒரு மாதத்தின் நட்சத்திரத்தை வைத்து சாந்திரமான மாதங்கள் என்று தெலுங்கு சம்பிரதாயத்தில் குறிப்பிடப்படுகிறது.

யுகாதியின் சிறப்பு:

ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் வருகிற அமாவாசைக்கு மறுதினம் சாந்திரமான வருடம் என்ற பெயரில் சந்திரன் பன்னிரெண்டு அம்சங்களோடு திகழும் மாதங்கள் தொடங்குகின்றன. அதன்படி ஒவ்வொரு அமாவாசைக்கு மறு நாள் வரும் பிரதமை முதல் அடுத்துவரும் அமாவாசை வரை கணக்கிடப்படும் மாதங்களுக்கு வடமொழியில் ஒவ்வொரு பெயர் உண்டு. இந்த மாதங்களின் பெயர்கள் பவுர்ணமி எந்த நட்சத்திரத்தின் நாளில் நிகழ்கிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரில் அழைக்கப்படும்.

பொதுவாய் யுகாதி பண்டிகை பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் கொண்டாடப்படும். அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால்கூட மறுநாள்தான் யுகாதி கொண்டாட வேண்டும் என்பது விதி. மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த யுகாதி பண்டிகை உணர்த்துகிறது.

யுகாதி நாளன்று மாலையில், ஒரு பொது இடத்தில் மக்கள் கூடி இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், புராணங்கள் படிப்பது, விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வார்கள். புதிய முயற்சிகளுக்கு வித்திடும் நாளாக இந்த நாள் அமைவதாக மக்கள் கருதுகிறார்கள். எனவே, இந்த நாளில் மங்களமான காரியங்களைத் தொடங்குகிறார்கள்.

யுகாதிப் பண்டிகையை யொட்டி திருப்பதி வேங்கடாசலபதி பெருமாள் கோயிலில் 40 நாள்கள் நித்ய உற்சவம் நடைபெறும். ஆந்திர, கர்நாடகப் பகுதியிலுள்ள எல்லா ஆலயங்களிலும் விசேஷ பூஜைகளும் ஆராதனைகளும் இந்த நாளில் நடைபெறும். புத்தாண்டாக மட்டுமன்றி இளவேனிற்காலத்தின் தொடக்க நாளாகவும், அதை மகிழ்வோடு வரவேற்கும் நாளாகவும் இந்த யுகாதி தினம் மராட்டிய, கொங்கண் பகுதிகளில் அனுஷ்டிக்கப்படுகிறது.

இனி பண்டிகை கொண்டாடும் முறை:

இப்பண்டிகைக்கும், நமது தமிழ் வருடப்பிறப்பு கொண்டாட்டத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை.   காலையில் எழுந்து புனித நீராடி, கௌரி தேவியை நினைத்து, தீபம் ஏற்றி வழிபட வேண்டும். புதிய பஞ்சாங்கத்தைப் பூஜையறையில் வைத்து, அதைச் சந்தனம், குங்குமம், மலர்களால் அலங்கரிக்க வேண்டும். தொடர்ந்து ஏழு ருசியுள்ள பச்சடியைச் செய்ய வேண்டும். இதற்கு சத்ருஜி (சத் – ஏழு) பச்சடி என்று பெயர். இதில் உப்பு, புளிப்பு, இனிப்பு, கசப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு ஆகிய ருசிகள் இருக்க வேண்டும்.

விநாயகர், பெருமாள், கௌரி அம்பிகை மற்றும் இஷ்ட தெய்வம், குலதெய்வங்களை முன்வைத்து ஒப்பட்லு என்கிற விசேஷ போளி, புளியோதரை, பால் பாயசம் செய்து ஏழு ராகங்கள் பாடி தெய்வங்களுக்குப் படையல் செய்து, ஆரத்தி செய்வது வழக்கம். பின், ஏழை எளியோருக்கு நிவேத்திய பொருட்களை கொடுப்பது வழக்கம்.

பஞ்சாங்கம் படித்தல்:

உகாதி பண்டிகை ஒரு ஆண்டாகிய யுகத்தின் தெய்வ அனுகூலத்தையும் உலக மக்களின் வாழ்க்கை நலன்களையும் முன்னதாகவே அறிந்துகொள்ளக்கூடிய காலக்கண்ணாடியாக திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்து விதமான அங்கங்களைக் கொண்ட மங்களகரமான பஞ்சாங்கப் படனமாக மலர்கிறது. திருமலையில் இன்று யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று உற்சவ மூர்த்திகளை தங்க வாசல் அருகில் எழுந்தருளச் செய்து ஆஸ்தானம், பஞ்சாங்கம் படித்தல் நிகழ்ச்சி நடைபெறும்.

யுகாதி பண்டிகையை வரவேற்று ஒரு துதி கூறிய பிறகு அந்தந்த மாதத்தின் பலனைக் குடும்பத் தலைவர் படிப்பார். இந்த ஆண்டின் இயற்கை வளம், மழைப் பொழிவு, அரசாங்கத்தின் மூலம் கிடைக்கும் நன்மை, ஆட்சியாளர்களின் நிலை, நட்சத்திரங்களின் அடிப்படையில் முற்பாதி, நடுப்பகுதி, பின்காலப் பலன்கள், ஆண்டின் கந்தாய பலன்கள், நவக்கிரகங்கள் எந்தெந்த பொறுப்பில் இந்த ஆண்டு முதல் மந்திரிகளாகவும் அரசர்களாகவும் வருகிறார்கள் ஆகிய விவரங்களைப் பஞ்சாங்கப் படனத்தின் மூலம் அறியலாம்.

அவர்களால் இயற்கையிலும் மனித வாழ்க்கையிலும் ஏற்படும் மாறுதல்கள், குரு, சனி, ராகு, கேது கிரச்சார முறையில் இடம் மாறுதல்களால் பூமியிலும் மக்கள் மத்தியிலும் எவ்விதமான மாற்றங்கள், எந்தக் காலங்களில் நிகழும் என்ற குறிப்புகளைப் படித்தறிவது வழக்கம்.

யுகாதி பண்டிகை ஒரு ஆண்டாகிய யுகத்தின் தெய்வ அனுகூலத்தையும் உலக மக்களின் வாழ்க்கை நலனகளையும் முன்னதாகவே அறிந்துகொள்ளக்கூடிய காலக்கண்ணாடியாக திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்து விதமான அங்கங்களைக் கொண்ட மங்களகரமான  அறிவிப்பாய் திகழ்கிறது.

மகாகவி காளிதாசரின் உத்தரகாலாமிருதம்

 என்னும் ஜோதிட நூலில் முப்பத்தியெட்டாம் பாடல் கீழ்வரும் வரிகள் மூலம் யுகாதிப் பண்டிகையைக் குறிப்பிட்டுள்ளது.

வருஷாதி பிரதிபந்தவேத சஹிதா க்ராஹ்யா ரக்ஷ்னாம் பதே:

மத்யாஹ்னே நவமி பிதௌ பகவதோ ஜென்மா பவத்சா திதி:

உகாதி சுலோகம்

உகாதி பண்டிகையான இன்று கீழ்கண்ட சுலோகம் சொல்லி வெல்லம் கலந்த வேப்பம்பூ பச்சிடியை ஆண்கள் பெண்கள் என அனைவரும் சாப்பிட வேண்டும், இதனால் வைரம் போன்ற உடலும், அனைத்து ஸம்பத்தும் கிட்டும்

சதாயூர் வஜ்ர தேஹாய சர்வ சம்பத்கராய ச |

சர்வாரிஷ்ட விணாசாய நிம்பஸ்ய தல பக்ஷ்ணம் ||.

விடியற்காலை குளியல்:

பண்டிகையின் போது அனைவரும் விடியற்காலையில் குளித்து விடுவார்கள். அதன் பின் வீட்டின் முகப்பை மாவிலைகளால் அலங்கரிப்பார்கள். சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் புதல்வர்களுக்கான விநாயகருக்கும் முருகனுக்கும் மாம்பழம் என்றால் கொள்ளை பிரியம் என்று நம்பப்படுகிறது. அதனால் மாவிலைகளை கட்டினால், நல்ல தானியங்களை அளித்து குடும்ப நலனை அவர்கள் காப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

யுகாதித் திருநாள் புதிய வாழ்க்கையின் ஆரம்பமாகக் கொண்டாடப்படுகிறது.

“யுகாதி’என்றால் “புதிய பிறப்பு’.

புதிதாக பிறக்கும் ஒவ்வொரு ஆண்டும் நலமாகவும், ஒற்றுமை உணர்வை தூண்டுவதாகவும் அமைய வேண்டும் என்னும் நோக்கத்தில் சிறப்புப்பெறுகிறது.சந்திரனின் சஞ்சாரப்படி சித்திரை முதல்நாள் தான் யுகாதி

கொண்டாடப்பட்டது.பிற்காலத்தில் சூரிய சஞ்சாரத்தின் அடிப்படையில் புத்தாண்டு பிறப்பு கணிக்கப்பட்ட போது, யுகாதி கொண்டாட்ட நாளில் மாற்றம் ஏற்பட்டது.யுகாதி நாளில் லட்சுமி குபேரருக்கு செல்வ அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

நம்ம ஊர் மாவிளக்கு போல ஆந்திரத்தில் பிரபலமான இனிப்பான சலுவுடி என்னும் மாவுப்பண்டம். தெலுங்கு வருடப்பிறப்பிற்கு வீட்டுக்கு வீடு அவசியம் செய்வார்கள்.

அதிரசம் யுகாதி அன்று செய்யடும் சிறப்பான இனிப்பு.

தெலுங்கு தேவதை ஒரு கையில் அமிர்த கலசம் மறுகையில் விவசாயிகளின் உயிர் “நெற்பயிர்” கொண்டு யுகாதி  யுகத்தின் தொடக்கம் (யுகம் + ஆதி = யுகாதி) என்று பொருள்.ஒரு சில இடங்களில், சந்திர நாட்காட்டியின் வழியே புத்தாண்டு கொண்டாடப்பட்டு வந்தது.சூரிய நாட்காட்டியின் வழியே, தமிழ் நாட்டில் தமிழ் புத்தாண்டாகவும், அசாமில் பிஹுவாகவும், பஞ்சாபில் வைசாஹியாகவும், ஒரிஸாவில் பாண சங்கராந்தியாகவும், மேற்கு வங்கத்தில் நாப பார்ஷாவாகவும் கொண்டாடப்படுகிறது.

மக்கள் தத்தம் வீடு வாசல்களை தூய்மையாக்கி, வெள்ளையிட்டு, புத்துணர்வு பெற என்னை குளியல், உற்சாகத்துக்கு புது துணிமணிகள் அணிந்து மிகவும் மகிழ்ச்சியாக புது வருடத்தை வரவேற்று பிரார்த்தனை செய்வர்.

எப்படிக் கொண்டாடுவது?

விநாயகர், பெருமாள், கௌரி அம்பிகை மற்றும் இஷ்ட தெய்வம், குலதெய்வங்களை முன்வைத்து ஒப்பட்லு என்கிற விசேஷ போளி, புளியோதரை, பால் பாயசம் செய்து ஏழு ராகங்கள் பாடி தெய்வங்களுக்குப் படையல் செய்து, ஆரத்தி செய்வது வழக்கம். அனைவரும்

அஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு பிரசாதம் எடுத்துக்கொண்டு, மங்கள ஆரத்தி செய்வது வழக்கம்.

ரங்கோலி:

சுற்றுச்சூழலை தூய்மையாக்க, நற்பதமான மாட்டின் சாணம் கலந்த நீரை கொண்டு வாசல் தெளிப்பார்கள். அதன் பின் ஒவ்வொரு வீட்டிலும் அழகிய ரங்கோலி கோலங்கள் போடப்படும்.

பஞ்சாக சரவணம்

வீட்டினுள் உள்ள அனைவரின் வருங்காலத்தை கணிக்க, புகழ் பெற்ற இந்த மரபு பின்பற்றப்படுகிறது. ஒரு ஜோதிடரை உகாதி தினத்தன்று வீட்டிற்கு வர வைத்து, அந்த வருடத்திற்கு குடும்ப உறுப்பினர்களின் நேரம் எப்படி இருக்கிறது என்பது கணிக்கப்படும்.

கவி சம்மேளம்

உகாதி தினத்தன்று இலக்கியம் சார்ந்த கூட்டங்களும் நடைபெறும். இதில் கவிதைகள் படித்து, இலக்கியம் சார்ந்த விவாதங்களும் நடைபெறும். மேலும் வந்திருக்கும் விருந்தாளிகளுக்கு, பல விதமான சுவைமிக்க சைவ உணவுகளை சமைத்து போடுவதும் ஒரு வழக்கமாகும்.

யுகாதி பச்சடி:

யுகாதியன்று, எல்லார் வீடுகளிலும் யுகாதி பச்சடி செய்யப்படும்.  வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சர்யம் கலந்தது என்பதை உணர்த்தும் வகையில், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், புளிப்புக்கு புளி பானகம், உரைப்புக்கு மிளகாய் அல்லது மிளகு, இனிப்புக்கு வெல்லம் ஆகிய பொருட்களால் ஆன பச்சடி செய்து சுவாமிக்கு படைத்து அனைவருக்கும் உணவில் பரிமாறிவார்கள். இந்த பச்சடி ஆந்திராவில் யுகாதி பச்சடி என்றும், கர்நாடகத்தில், பேவுபெல்லா என்றும் அழைக்கப்படுகிறது.

பிற உணவு வகைகள்

ஒப்பட்டு(ಒಬ್ಬಟ್ಟು) அல்லது பூரண போளி/பூரண போளி -ஆந்திரப் பிரதேசம், தெலங்காணா, கருநாடகம், மற்றும் மகாராட்டிரம் மாநிலங்களில் உகாதி அன்று செய்யப்படும்.

கருநாடகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்காணா வில் உகாதி அன்று செய்யப்படும் சிறப்பு உணவு வகை பூரண போளி ஆகும். இது மைதா மாவு, வெல்லம் மற்றும் தேங்காய் பயன்படுத்தி செய்யப்படும் சுவையான சிற்றுண்டி ஆகும். மக்கள் இதனுடன் நெய், பால் கலந்து உண்ணும் பழக்கம் உள்ளது.

தமிழ் நாட்டில் உகாதி

தமிழ் நாட்டில் உகாதி, தமிழ்நாட்டை தாயகமாக கொண்ட தெலுங்கு மொழி பேசுவோராலும் ஆந்திராவில் இருந்து இங்கு குடியேறியவர்களாலும் கொண்டாடப்படுகிறது. தமிழக தெலுங்கு பேசுவோர் பெரும்பாலும், உகாதி பச்சடி போன்ற உகாதியுடன் தொடர்புடையவற்றை செய்து வழிபாடு நடத்தி உகாதியை கொண்டாடுவர்.

யுகாதித் தினத்தில், நல்ல காரியங்கள் துவங்கினால் நிச்சயம் வெற்றி கிட்டும் என்றும் நம்பப்பட்டு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 அனைவருக்கும், “யுகாதி சுபக்காஞ்சலு”

All Hindu Spiritual Items Under One Roof
Raja Spiritual Pvt Ltd.,
Kanchipuram || Vellore
www.rssonline.in

அறிந்தும்! அறியாத!! அற்புதத் தகவல்கள்!

அறிந்தும் அறியாத அற்புதத் தகவல்கள்

1. விநாயகருக்கு சாற்றிய அருகம் புல் மாலையை உதிர்த்து அதை நன்றாக காய விட்டு வியாழன், பௌர்ணமி அம்மாவசை அன்று தூபம் போட தீய சக்திகள் இருந்தால் விலகி ஓடும். இதை வியாபார இடத்திலும் செய்யலாம்.

2. தொட்டா சிணுங்கி, முடக்கத்தான், துளசி, வில்வம், கத்தாழை போன்ற செடிகளை வீட்டில் வளர்த்தால் கண் படுதல், ஏவல், சூன்யும், வினைகள் போன்ற தீய சக்திகள் எளிதில் வீட்டிற்குள் வராது.

3. வீட்டில் விக்ரகங்களை வைத்து வழிபாடு செய்பவர்கள் கறவை பசும் பால், தேங்காய் நீர், அரைத்த சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

4. மனிதனின் கை கால்கள் படாத நீரில் அல்லது பழசாறு இவைகளிலும் பண்ணலாம். இவைகள் இல்லை என்றால் செய்யாமல் இருங்கள்.

5. மயில் தோகையை வீட்டில் வைத்து இருப்பதால் முருகனின் ஆசிகள் கிடைக்கும். (சில எண்ணிக்கை மட்டும்)

6. கோவில்களில் அபிஷேகத்திற்கு கறவை பசும் பால் மட்டும் தரவும், (பதப்பட்ட பால் வேண்டாம்), அல்லது இளநீரைத் தர வேண்டும். இவைகள் உங்கள் சந்ததி அனைவரின் பாபத்தையும், சாபத்தை போக்கும் வல்லமை உடையது.

7. வெள்ளை மிளகு, கடுகு, காய்ந்த வில்வ இலைகள், நாய் கடுகு (மிளகு), பால் சாம்பிராணி, கடுக்காய், காய்ந்த வேப்ப இலைகள், ஓமம், தான்றிக் காய், காய்ந்த மருதாணி இலை, மஞ்சள் இவைகளை நன்றாக கலந்து அம்மாவசை, பௌர்ணமி, வெள்ளிகிழமை போன்ற நாட்களில் தூபம் போடுவது சகல நன்மைகளை தரும், குல சாமிகளின் ஆசிகள் கிடைக்கும்.

8. எந்த ஒரு நல்ல காரியம் துவங்க வெளியில் செல்லும் பொழுதும் அருகில் உள்ள விநாயகருக்கு ஒரு தேங்காய் உடைப்பதும், பசுவிற்கு வாழைப் பழம் தருவதும் துவங்கும் அக்காரியத்தை வெற்றியடைய செய்யும்.

9. கொப்பரை தேங்காயை துண்டுகளாகி அதை தூபமாக பெருமாளுக்கு காண்பிக்க பெருமாளும், கருப்பு சாமியும் குலத்தை காப்பார்.

10. ஒரே நாளில் 9 வகையான லிங்க மூர்த்திகளை தரிசனம் செய்ய சனி தேவரின் ஆசிகள் பெற்று, ஆயுள் தோஷம் நீங்கி ஆரோகியம் ஏற்படும் (தனியாக உள்ள கோவில்கள்).

11. பசு நெய்யை செப்புப் பாத்திரத்தில் (தாமிரம்) நிறைத்து கோவிலுக்கு தர்மம் செய்தால் வம்ச சாபம் விலக வழிகளை தெரியப்படுத்தும்.

All Hindu Spiritual Items Under One Roof
Raja Spiritual Pvt Ltd.,
Kanchipuram || Vellore
www.rssonline.in

பங்குனி உத்திரம் ஸ்பெஷல்!

பங்குனி உத்திரம் ஸ்பெஷல்!

மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு. பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாள் பங்குனி உத்திரம். தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்கின்றன புராணங்கள்.

தெய்வங்களே உத்திரத்தை சிறந்த நட்சத்திரம் என்று தேர்வு செய்த பெருமை உண்டு.

பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை :

👉 திருப்பரங்குன்றத்தில் முருகன் – தெய்வானை திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.

👉 மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள்.

👉 பிரம்மன், தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தைப் பெற்றார்.

👉 தன் மனைவி இந்திராணியை பிரிந்திருந்த இந்திரன், மீண்டும் அவளுடன் சேர்ந்த நாள் இது.

👉 சந்திர பகவான், கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம்.

👉 ராமபிரான் – சீதாதேவி, பரதன் – மாண்டவி, லட்சுமணன் – ஊர்மிளை, சத்ருக்னன் – ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த தினம்.

👉 இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது இந்த நாளில் தான்.

👉 மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.

👉 ஆண்டாள் – ரங்கமன்னார் திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.

  👉 இந்த நாளில் தான் இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது.

👉 பங்குனி உத்திரத்தில்தான் தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் பிறந்தார்.

👉 அர்ச்சுனன் பிறந்தது பங்குனி உத்திரத்தில்தான்.

👉 வள்ளி அவதாரம் செய்தது பங்குனி உத்திரத்தில்தான்.

👉 காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது இந்த நாளில் தான்.

👉 தனது தவத்தைக் கலைத்த மன்மதனை, சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். பின்னர், தன்னை வணங்கி மன்றாடிய ரதிதேவியின் வேண்டுகோளுக்கு இரங்கி, மன்மதனை மீண்டும் சிவனார் உயிர்ப்பித்தது பங்குனி உத்திரம் திருநாளில்தான்.

👉 சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக்கோலத்தில் பரமன் காட்சி தந்தது இந்த நாளில்தான்.

👉 சாஸ்தா அவதரித்தது பங்குனி உத்திர திருநாளில்.

இவ்வளவு சிறப்புகள் ஒன்றாகப் பொருந்திய பங்குனி உத்திர நாளில் ஆலயம் சென்று வழிபடுவோம். இறைவனின் ஆசியைப் பெறுவோம்…!

All Hindu Spiritual Items Under One Roof
Raja Spiritual Pvt Ltd.,
Kanchipuram || Vellore
www.rssonline.in

மகிமை வாய்ந்த மாசி மகம்! மாசி மகம் சிறப்பு!!

மாசி மகம் சிறப்பு:

மாசி மாதம் இந்துக்களின் வழிபாட்டுக்குரிய புண்ணிய மாதங்களில் ஒன்றாகும். இம்மாதம் முழுவதுமே புனித நீராடலுக்குரியது என்றால் மிகையாகாது.

ஒவ்வொரு ஆண்டிலும் சூரியன் கும்ப இராசியில் இருக்கும் போது மாசி மாதம் நடைமுறையில் இருக்கும். அம்மாத பெளர்ணமி நாளில் சூரியனும், சந்திரனும் நேர் எதிர் எதிராக இருக்கும் நாளில் தான் மாசி மகத் திருவிழா நடக்கும். இது ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவாகும்

மாசி மகம் என்றாலே மக நட்சத்திரத்தின் தனித்துவமும் பௌர்ணமியின் செறிவும் நினைவுக்கு வரும். ஆம்,பௌர்ணமி நிலவன்று மக நட்சித்திரம் வரும் நாளில் கொண்டாடப்படும் தமிழர் நன்னாளே மாசி மகம் எனப்படும். 

சரி, இந்த பெயரே சொல்கிறது மாசி மாதத்தில் தோன்றும் மக நட்சத்திரத்திற்கே மாசி மகமெனப் பெயரென.  இந்த மக நட்சத்திரத்தின் தனிப்பட்ட பெருமை என்ன?  நீங்கள் யோசிப்பது புரிகிறது.  இதோ மக நட்சத்திரத்தின் பெருமைகள் உங்கள் பார்வைக்காக.

மக நட்சத்திரத்தின் அருமைகள்:

 மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன்னர்களாக புவி ஆள்வார்கள். மிகுந்த சக்தியும் திறனும் படைத்தவர்கள். மகம் பித்ருகளுக்கான நட்சத்திரமாகவும் கருதப்படுகிறது.

பௌர்ணமியின் சிறப்பு:

பௌர்ணமி அன்று நிலவு முழுமையான தோற்றம் பெற்று சந்திரனின் முழு சக்தியும் உடையதாய் திகழ்கிறது. இது மக்களுக்கு வளமும், நலனும் அளிக்கக் கூடிய நாளாகும். 

மகமும் பௌர்ணமியும் இணையும் மாசி மகம் வருடத்திற்கு ஒரு முறையே வருகிறது. இந்த நாளில் இறைவனை வேண்டி நிற்போருக்கும். பித்ரு சேவை செய்வோருக்கும் நிறைந்த பலன்கள் கிட்டும்.

மாசிமகத்தை எப்படி கொண்டாடுவர்? 

மாசி மகத்தன்று கோயில்களில்  சிவ,  பார்வதி,  விஷ்ணு சிலைகளை புனித நீரில் நீராட்டி பூஜை செய்வது வழக்கம். இந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று புனித நீர் நிறைந்த நதியிலோ, குளத்திலோ, கடலிலோ நீராட்டி பூஜை செய்வது வழக்கம். (சில கோவில்களில் கஜ பூஜை அல்லது அஸ்வ பூஜை செய்வது வழக்கம்). பக்தர்கள் அந்த தெய்வங்களை நீராட்டிய புனித நீரில் நீராடுவதால் தங்கள் பாபங்கள் தொலைந்து புண்யம் தேடிக் கொள்கிறார்கள். பிறவிப் பிணியிலிருந்து விடுபடுவார்கள். இறை அருள் பெறுவார்கள். இந்த நாளில் பார்வதிக்கு குங்கும அர்ச்சனை செய்வது விசேஷ பலன்கள் கொடுக்கும்.  ஏதாவது ஒரு தீர்த்தத்தில் நீரடினாலே இந்த நாளில் நற்பலன்கள் கிட்டும்.அந்நாளில் இறை திரு உருவங்களை கடல், ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளுக்கு எடுத்துச் சென்று எழுந்தருளச் செய்து திருமுழுக்காட்டுவது தொன்று தொட்டு இருந்து வரும் வழிபாட்டு முறையாகும்.

மாசி மகம் பித்ரு சேவைக்கு உகந்த நாள்

மாசி மகம் அன்று பித்ருக்கள் பூமிக்கு வந்து தங்கள் கர்மாக்களை தொலைப்பதாக கூறப்படுகிறது. இன்று பித்ரு தர்ப்பணம் செய்தால் அவர்களின் ஆசியும், தொடர்ந்து வந்து படுத்தும் வினைகளுக்கு தீர்வும் கிடைக்கும்.  இந்த நாளில் அன்னதானம் செய்வது நல்லது.

மாசி மகம் கொண்டாடுவதின் புராண வரலாறு:

வல்லாள மகாராஜா என்பவர் திருவண்ணாமலையில் அரசாண்டு வந்தார். குழந்தை இல்லாத அவர் முன் எம்பெருமானாம் சிவன் ஒரு பாலகனாகத் தோன்றி அவர் இறக்கும் தருவாயில் அவர்தம் ஈமச் சடங்குகளை செய்வதாக வாக்களித்தார். அவ்வாறே அந்த அரசர் இறந்த அன்று சிவபெருமான் அவரின் ஈமச் சடங்குகளை செய்ததாக புராணம் கூறுகிறது. இன்று கூட மாசி மகம் அன்று சிவ பெருமான் பூமிக்கு வந்து அந்த அரசருக்கு உரிய சடங்குகளை செய்வதாக கருதப்படுகிறது.

மாசிமகத்தை பற்றி மற்றுமொரு புராணக் குறிப்புமுண்டு. எம்பெருமான் சிவனார் உலகத்தை அழித்து மீண்டும் உருவாக்கத் திட்டமிடுவதை உணர்ந்த பிரம்மன் அவரிடம் மீண்டும் உலகத்தை உருவாக்குவது எப்படி எனக் கேட்டார். சிவனும் ஒரு கும்பத்தில் அமிருதத்தை நிரப்பி அதை மேரு மலையின் உச்சியில் வைக்கப் பணித்தார். பிரளயத்திற்கு பிறகு, உலகம் அழிந்த நிலையில் மீண்டும் அதனை உருவாக்க அந்த அமிருத கலசத்தை வைத்த இடத்திலிருந்து உபயோகிக்கக் கூறினார். பிரமனும் அப்படியே செய்தார். இது நடந்த தினம் மாசி மகம். ஆம்,பிரமன் மாசி மாதத்தில் மக நட்சத்திரம் தோன்றிய அன்றே  உலகை உருவாக்கினார். அந்த இடம் கும்பகோணம் எனப் பெயர் பெற்றது. இந்த நாளில் சிவனாரின் சக்தி முழுமையாக அண்டம் முழுவதும் வியாபித்து இருக்கும்.

என்னப்பன் கந்தனாம் முருகவேள் தனது தகப்பனுக்கு உபதேசம் அளித்த திருநாளும் இதே.

மாசி மகத்தன்றே அன்னை பார்வதி தக்ஷனின் மகள் தாக்ஷாயணியாக அவதரித்தாள். எனவே பெண்டிர் இந்த நாளை விரதத்திற்கு உகந்ததாக கருதி அம்மனுக்கு பூஜை செய்து புண்ணியம் தேடுகிறார்கள்.

மகத்தில் பிறந்தவர் ஜகத்தை ஆளுவர் என்பது ஜோதிட பழமொழி, அவ்வளவு சிறப்பு மிக்கது மக நட்சத்திரம். ஜகன் மாதாவாசிய தேவி தக்ஷபிரஜாபதி எனும் ஓர் அரசனின் மகளாக தோன்ற வேண்டி இருந்தது. எனவே, அலகாபாத் அருகே உள்ள காலிந்தி என்னும் இடத்தில் கங்கையின் கிளை நதியான யமுனா நதியில் புனிதமான ஒரு வலம்புரிச் சங்கின் வடிவில் தோன்றி மன்னனை அடைந்து அவரது வளர்ப்பு மகளானார். அப்படி தேவி பூவுலகில் தோன்றியது ஒரு மாசி மாதம் மகம் நட்சத்திர நாளில் என்பது புராண வரலாறு.

பகவான் விஷ்ணு பூமியை பாதாளத்திலுருந்து எடுத்து வந்த வராஹ அவதாரத் திருநாளும் இதே.

மஹா மகம்:

மஹா மகம் என்பது 12 வருடங்களுக்கு ஒரு முறை வருவது. இது தெற்கு இந்தியாவின் கும்ப மேளாவாக கொண்டாடப்படுகிறது. இந்த திருநாள் கும்பகோணத்தில் உள்ள ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் உள்ள மஹாமக குளத்தில் அருமையாகக் கொண்டாடப்படுகிறது. லக்ஷக்கணக்கான பக்தர்கள் இந்த குளத்தில் ஸ்நானம் செய்வதை பாக்யமாகக் கருதுகிறார்கள்.

மாசி மகம் தமிழர் திருநாள் 

மாசி மகம் தமிழ் பேசும் நல்லுலகம் உலகின் எந்தெந்த மூலைகளில் இருக்கிறார்களோ அத்தனை பேர்களாலும் கொண்டாடப்படுவது. கும்பகோணம், ஸ்ரீரங்கம், பாண்டிச்சேரி போன்ற இடங்களில் சிறப்பாகக் கொண்டாப்படுகிறது. சிங்கப்பூரிலும் கொண்டாடப்படுகிறது.

இப்படியாக மாசி மகம் நம் இல்லல்களை விடுவித்து நன்மைகளை அளிக்கிறது. புண்யத்தை தேடிக் கொடுக்கிறது.

18 சித்தர்களும்! ஜீவசமாதியும்!!

சித்தர்கள் ஜீவ சமாதியான இடம், அவர்கள் வாழ்ந்த நாட்கள்.
(18 Siddhargal and Jeeva Samadhi of Tamil Nadu)

 1. அகஸ்தியர் – 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.
 2. பதஞ்சலி – 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.
 3. கமலமுனி – 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.
 4. திருமூலர் – 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில் சமாதியானார்.
 5. குதம்பை சித்தர் – 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.
 6. கோரக்கர் – 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.
 7. தன்வந்திரி – 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.
 8. சுந்தராணந்தர் – 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.
 9. கொங்ணர் – 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.
 10. சட்டமுனி – 800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார்.
 11. வான்மீகர் – 700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார்.
 12. ராமதேவர் – 700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில் சமாதியானார்.
 13. நந்தீஸ்வரர் – 700 வருடம் 03 நாள் வாழ்ந்தார். காசியில் சமாதியானார்.
 14. இடைக்காடர் – 600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணா மலையில் சமாதியானார்.
 15. மச்சமுனி – 300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.
 16. கருவூரார் – 300 வருடம் 42 நாள் வாழ்ந்தார். கரூரில் சமாதியானார்.
 17. போகர் – 300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.
 18. பாம்பாட்டி சித்தர் – 123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். சங்கரன்கோயிலில் சமாதியானார்

(மரணமில்லா பெருவாழ்வு – சாகா கல்வி) உலகில் உள்ள மனிதர்கள் வெல்ல முடியாத மரணத்தை வென்றவன் தமிழன். வாழ்க தமிழ், வளர்க தமிழ்… வெல்க சித்தர்கள் நுண்ணறிவு!!!

🙏 ஓம் நமசிவாய! திருச்சிற்றம்பலம்! வாழ்க வளமுடன்!🙏